rajini and nithin  
க்ரைம்

“மகளை போலவே தூக்கிட்டு தற்கொலை செய்த தந்தை” - ஜெயிலுக்கு சென்று வந்தும் அடங்காத குற்றவாளிகள்.. உண்மையை மறைக்கிறதா போலீஸ்?

உங்களால் என்ன செய்ய முடியும் நாங்கள் வெளியே வந்து விட்டோம் யாரும் எங்களை எதுவும் செய்ய முடியாது...

Mahalakshmi Somasundaram

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த சக்கரகுப்பம் பகுதியை சேர்ந்தவர்கள் 44 வயதுடைய ரஜினி 42 வயதுடைய கோமதி தம்பதியினர் இவர்களின் மகள் 15 வயதுடைய தர்ஷினி என்கின்ற பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவி கடந்த (ஏப் 14 ) ஆம் தேதி அன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதனை தொடர்ந்து இறந்துபோன தர்ஷினியின் தற்கொலைக்கு அதே பகுதியை சேர்ந்த ரேவதி, நித்தின்குமார், இலக்கியா, செங்குட்டுவன் என்பவர்கள் தான் காரணம் என்று ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு செங்குட்டுவனை தவிர அவரது மனைவி ரேவகி, மகன் நித்தின்குமார், மகள் இலக்கியா ஆகிய மூன்று பேரை பிடித்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் வெளியில் சுற்றித் திரிந்த செங்குட்டவன் இறந்து போன தர்ஷினியின் தந்தை ரஜினி மற்றும் ரஜினியின் மகன் சந்தோஷ் ஆகியோரிடம் அவ்வப்போது வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்தது வந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் இது தொடர்பாக ரஜினி ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் தகவல் அளித்தும் ஜோலார்பேட்டை போலீசார் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதற்கிடையில் சிறையில் அடைக்கப்பட்ட ரேவதி, நித்தின் குமார், இலக்கிய ஆகிய மூவரும் ஜாமினில் வெளிவந்த நிலையில் அவர்களில் ஒருவருக்கு அம்மா உணவகத்தில் பணியும் கிடைத்திருக்கிறது.

இந்த நிலையில் இம்மூவரும் அடிக்கடி இறந்து போன தர்ஷினியின் வீட்டுக்கு சென்று வீட்டில் உள்ள சந்தோஷ் மற்றும் அவரது தந்தை ரஜினியை ஆபாசமாக வார்த்தைகளால் திட்டி “உங்களால் என்ன செய்ய முடியும் நாங்கள் வெளியே வந்து விட்டோம் யாரும் எங்களை எதுவும் செய்ய முடியாது அடுத்து சாவு நீதான்” என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். குற்றவாளி என சிறைக்கு சென்று வந்தும் கூட தன்னையும், தன் மகனையும் இவ்வாறு அவமானப்படுத்துகிறார்களே என்று மன உளைச்சலில் இருந்த ஆட்டோ டிரைவர் ரஜினி இன்று காலை தன் மரணத்திற்கு யார் காரணம் என்பதை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டு விட்டு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது தொடர்பாக ஜோலார்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ரஜினியின் சடலத்தை கைப்பற்றி வீடியோவில் பதிவு செய்த குற்றவாளிகள் எவரையும் குறிப்பிடாமல் ரஜினியின் சாவுக்கு மனஉளைச்சலும், கணவன் மனைவி இடையே ஆன தகராறின் காரணமாகத்தான் ரஜினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக ரஜினியின் குடும்பத்தாரிடம் போலீசார் எழுதி வாங்க முற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் இறந்துபோன ரஜினி குடும்பத்தார் மற்றும் உறவினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் சாவுக்கு யார் காரணம் என்பதை சரியாக புகாரில் பதிவு செய்ய வேண்டும் என்று போலீசாரிடம் ஆட்டோ டிரைவர் ரஜினியின் குடும்பத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் இரண்டு மாதத்திற்கு முன் 15 வயது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.