க்ரைம்

12 வயது மாணவன் மூலம் குழந்தை பெற்ற ஆசிரியை! நிர்வாண புகைப்படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை.. 16 மாதங்களாகத் தொடர்ந்த கொடுமை!

சிறுவனின் தாயார் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளே இந்தக் குற்றத்தை வெளிச்சத்துக்குக்

Muthu Lakshmi

ஆஸ்திரேலியாவில் முன்னாள் மியூசிக் டீச்சர் ஒருவர், தனது 12 வயது மாணவனையே பாலியல் ரீதியாக துன்புறுத்தி.. அதன் மூலம் கர்ப்பமாகி உள்ளார். மேலும் 12 வயது சிறுவனுக்கு குழந்தை பெற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் குற்றத்திற்காக அந்தப் பெண்ணுக்கு 8 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்கு ஆஸ்திரேலியாவின் மண்டுரா பகுதியைச் சேர்ந்த 34 வயதான நவோமி டெக்கியா கிரேக் என்பவரே இந்தக் குற்றத்தில் தண்டிக்கப்பட்டுள்ளார். நவோமி அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் இசை ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். கடந்த நவம்பர் 24ஆம் தேதி, 13 வயதுக்குட்பட்ட சிறுவனைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியது, பாலியல் செயல்களில் ஈடுபடத் தூண்டியது, குழந்தைகள் தொடர்பான பாலியல் உள்ளடக்கங்களை வைத்திருந்தது உள்ளிட்ட 12 குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதையடுத்து, அவருக்கு 8 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதில் 6 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள் சிறையில் இருந்த பிறகே அவர் பரோல் பெறத் தகுதி பெறுவார். மேலும், வாழ்நாள் முழுவதும் ஆஸ்திரேலியாவின் பாலியல் குற்றவாளிகள் பதிவேட்டில் அவரது பெயர் இடம்பெறும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டு, அந்தச் சிறுவன் வேறு மாநிலத்தில் இருந்து மண்டுரா பகுதிக்குக் குடிபெயர்ந்து, நவோமி கிரேக் பணியாற்றிய பள்ளியில் சேர்ந்துள்ளார். அப்போது இருவருக்கும் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. நவோமி மேற்பார்வையிட்டு வந்த இசைக்குழுவில் அந்தச் சிறுவனும் இடம்பெற்றுள்ளார். இதன் மூலம் சிறுவனின் குடும்பத்தினருடனும் நவோமி நெருக்கமாகப் பழகி வந்துள்ளார். குறிப்பாக, சிறுவனின் தாயுடன் நட்பை ஏற்படுத்திக்கொண்டுள்ளார். இதன் மூலம் பள்ளி மாறிய சிறுவன் புதிய பள்ளிக்கு காரில் அழைத்துச் செல்லவும் உதவி செய்துள்ளார். இதற்காகச் சிறுவனின் தாயே அவரிடம் உதவி கேட்டதாக கூறப்படுகிறது. மேலும், சிறுவனின் வீட்டுச் சாவியும் நவோமியிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி, சிறுவனுக்கு 12 வயதாக இருந்தபோதே அவரைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தத் தொடங்கியுள்ளார். சுமார் 16 மாதங்களாக இந்தக் கொடுமை தொடர்ந்துள்ளது. சிறுவனின் தாயார் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளே இந்தக் குற்றத்தை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளன.

மேலும் சிறுவனுடன் நெருக்கத்தை அதிகரித்த நவோமி, தனது நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவனுக்கு அனுப்பியுள்ளார். மேலும், இசை சந்தா உள்ளிட்ட பல்வேறு பரிசுகளையும் வாங்கிக் கொடுத்துள்ளார். அதேசமயம், தான் அனுப்பும் குறுஞ்செய்திகளுக்குச் சிறுவன் பதிலளிக்காவிட்டால், அவனுக்குக் கொடுத்த பரிசுகளையும் சந்தாக்களையும் ரத்து செய்துவிடுவதாக மிரட்டி வந்துள்ளார்.

இதையடுத்து சிறுவனின் சமூக வலைதளக் கணக்குகளையும் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளார். மற்ற பெண்களுடன் சிறுவன் பேசுவது குறித்துக் கேள்வி எழுப்பியதுடன், தனது செயல்பாடுகளை பதிவு செய்ய வேண்டும் என்றும் வற்புறுத்தியுள்ளார். இவ்வாறு சிறுவனின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் தலையிட்டு அவரைக் கட்டுப்படுத்த முயன்றுள்ளார். இந்த விவகாரத்தில் மேலும் அதிர்ச்சியூட்டும் தகவலாக, சிறுவனுடன் சேர்ந்து குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள விரும்புவதாகவும் நவோமி தெரிவித்திருந்தார். கடந்த 2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கைது செய்யப்படுவதற்கு முன்புகூட, சிறுவனுக்கு தொடர்ந்து குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளார்.

இதற்கிடையே, சிறுவனின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்த சில வாரங்களுக்குப் பிறகு, நவோமி ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். தற்போது அந்தக் குழந்தைக்கு 10 மாதங்கள் ஆகின்றன. குழந்தை தனது தாயுடன் சிறையில் இருக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விசாரணையின்போது, நவோமிற்கு சில மனநலப் பாதிப்புகள் இருந்ததாகவும், அதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்ததாகவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நவோமி அந்தச் சிறுவனைக் காதலித்ததாகக் கூறினாலும், 12 வயது சிறுவன் பாலியல் உறவுக்குச் சட்டப்பூர்வமாகச் சம்மதம் தெரிவிக்கும் வயதை எட்டவில்லை என்பதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. ஆசிரியர் என்ற பொறுப்பில் இருந்துகொண்டு மாணவனின் நம்பிக்கையைத் தவறாகப் பயன்படுத்தியது மிகப்பெரிய நம்பிக்கை துரோகம் என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, நவோமி கிரேக்கிற்கு 8 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வாழ்நாள் முழுவதும் பாலியல் குற்றவாளிகள் பதிவேட்டில் அவரது பெயர் இடம்பெறவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்