திருச்சியில் காவலர் குடியிருப்பு உள்ளேயே நுழைந்து சரமாரியாக இளைஞர் ஒருவரை வெட்டி படுகொலை செய்த கும்பல். முதல்வர் ஸ்டாலின் திருச்சியில் உள்ள நிலையில் படுகொலை சம்பவத்தால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
திருச்சி பீமாநகர் பகுதியைச் சேர்ந்த தாமரைச்செல்வன் (வயது 25) என்ற இளைஞர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பீமா நகர் மாசிங் பேட்டை பகுதியில் அந்த இளைஞர் இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார்.
அப்போது எதிரே இருசக்கர வாகனங்களில் அடையாளம் தெரியாத கும்பல் அவரை வழிமறிதுள்ளது. செய்வதறியாது அவர் நின்ற போது அவரின் வண்டியை மோதி அவரை நிலைகுலையைச் செய்து அவரை கத்தி மட்டும் கட்டையால் கொடூரமாக தாக்க துவங்கியுள்ளனர் .
எப்படியோ தப்பித்த அந்த நபர் அங்குள்ள புதிய மாசிங்கிப்பேட்டை காவல் குடியிருப்பில் புகுந்துள்ளார். ஆனால் காவலர் குடியிருப்பு என்று கூட பாராமல் அந்த கும்பல் அந்த இளைஞரை கொல்ல துரதியுள்ளது. அப்போது அந்த இளைஞர் போக்குவரத்து காவலர் செல்வராஜ் என்பவரின் சமையல் அறைக்குள் புகுந்து ஒளிந்துகொள்ள முயன்றுள்ளார். ஆனால் அந்த வீட்டின் சமையல் அறையில் வைத்தே அந்த இளைஞரை அந்த கும்பல் கொடூரமாக வெட்டிக்கொன்றுவிட்டு, அந்த கும்பல் அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பாலக்கரை போலீசார் கொலை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சியில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் திருச்சி சென்றுள்ள நிலையில் காவலர் குடியிருப்பு உள்ளேயே புகுந்து இளைஞர் ஒருவரை வெட்டிப்படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.