பல ஆண்டுகளாகத் தன் சொந்தக் குடும்பத்தின் மூன்று தலைமுறையினரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக சிறுமி நீதிமன்றத்தில் கூறியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த சிறுமியின் தந்தை, தாத்தா மற்றும் இரண்டு சகோதரர்கள் குற்றவாளிகள் எனக் கண்டறியப்பட்டுள்ளனர்.
மேற்கு சசெக்ஸில் உள்ள வீட்டில் இந்தத் துன்புறுத்தல் நிகழ்ந்ததாகவும், அங்கு தனது தாய் இதை குறித்து அறிந்தே கண்டுகொள்ளாமல் விட்டதாகவும் அந்த சிறுமி கூறிள்ளார். தற்போது பதின்ம வயதில் இருக்கும் அந்தச் சிறுமி, தனக்கு ஆறு வயதிலிருந்தே பாலியல் வன்கொடுமைகள் நடந்ததாகக் கூறியுள்ளார். அந்த சிறுமி அவரின் தந்தை மற்றும் இரண்டு சகோதரர்களால் பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், தனது தாத்தாவால் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் கூறியுள்ளார். பாலியல் வன்கொடுமை மற்றும் சட்டவிரோத சிறைவைப்பு உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அந்தச் சிறுமியின் தாய், தந்தை, தாத்தா மற்றும் இரண்டு சகோதரர்களுக்கு 100 ஆண்டுகளுக்கும் மேலாக தற்போது சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தான் அனுபவித்த கொடுமைகளைப் பற்றி அந்தச் சிறுமி தனது தாயிடம் கூறியபோது, அச்சிறுமி தாக்கப்பட்டதாகவும், ஒரு அலமாரியில் பூட்டி கொடுமைப்படுத்தியதாவும் அச்சிறுமி கூறியுள்ளார். மேலும், அச்சிறுமி வாய் டேப்பால் ஒட்டப்பட்டு மூடப்பட்டதாகவும், மேலும் இரண்டு நாட்கள் பட்டினி போடப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் கூறப்படுகிறது. அந்தச் சிறுமியை சிகரெட்டுகளால் சூடு வைக்கப்பட்டதாகவும், குதிரைச் சாட்டையால் அடிக்கப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
தற்போது 12 வயது நிறைவடைந்த அச்சிறுமி, வீட்டிற்குச் செல்லப் பயந்ததால் அந்தச் சிறுமி தைரியமாகத் தன் ஆசிரியரிடம் இந்த துன்புறுத்தல் குறித்துத் தெரிவித்துள்ளார். அச்சிறுமி காவல்துறையிடம், "என் பெற்றோர் பல ஆண்டுகளாக அவரை எப்படித் தொடர்ந்து துன்புறுத்துகிறார்கள் என்று கூறியுள்ளார். பிறகு, பாலியல் ரீதியான விஷயங்கள் அனைத்தையும் விளக்கிக் கூறியுள்ளார். அச்சிறுமியின் 43 வயதான தந்தை, 13 வயதுக்குட்பட்ட குழந்தையை ஐந்து முறை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காகவும் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார். 43 வயதான அந்தத் தாய், 13 வயதுக்குட்பட்ட சிறுமியை கொடுமைப்படுத்திய நான்கு குற்றங்கள், சட்டவிரோதமாகச் சிறைவைத்த இரண்டு குற்றங்கள் மற்றும் நீதியின் போக்கைத் திசை திருப்பிய ஒரு குற்றம் ஆகியவற்றிற்காகவும் அவர் தண்டிக்கப்பட்டுள்ளார்.
மேலும், அச்சிறுமியின் 70 வயதான தாத்தா, 13 வயதுக்குட்பட்ட குழந்தையை பாலியல் ரீதியாகத் தாக்கிய ஒரு குற்றச்சாட்டிலும், 13 வயதுக்குட்பட்ட குழந்தையை பாலியல் ரீதியாகத் தாக்கிய இரண்டு குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார். அவரது மூத்த சகோதரரான 23 வயது இளைஞர், 13 வயதுக்குட்பட்ட குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த நான்கு குற்றச்சாட்டுகளிலும், ஒரு குழந்தையை பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடத் தூண்டிய ஒரு குற்றச்சாட்டிலும், மற்றும் உண்மையான உடல் காயத்தை ஏற்படுத்திய இரண்டு தாக்குதல் குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி எனத் தேர்ப்பளிக்கப்பட்டுள்ளார். அடுத்த 20 வயதான இளைய சகோதரர், 13 வயதுக்குட்பட்ட குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த நான்கு குற்றச்சாட்டுகளிலும்; 13 வயதுக்குட்பட்ட குழந்தையை பாலியல் ரீதியாகத் தாக்கிய இரண்டு குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.