சென்னை அடுத்த சிங்கப்பெருமாள் கோவில் பகுதி அருகே தாய் தந்தையுடன் வசித்து வரும் 8 வயது சிறுமி. இவர் அருகில் உள்ள அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறாள். தற்போது கோடை விடுமுறை காரணமாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்த நிலையில், அவளின் பெற்றோர்கள் அன்றாட கூலி வேலை செய்து வருகிறன்றன. அதனால் பெற்றோர்கள் வீட்டில் இல்லாத சூழலை பயன்படுத்தி எட்டு வயது சிறுமியிடம் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஜனார்த்தனன் என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் சிறுமிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதுடன், ரத்தக்கசிவும் ஏற்பட்டுள்ளது. பின்பு வேலை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்த பெற்றோர் சிறுமிக்கு ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதால், மகளிடம் கேட்டபோது தன்னிடம் வாலிபர் ஒருவர் தவறாக நடந்து கொண்டார் என கூறியதன் பேரில் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக சம்பந்தப்பட்ட வாலிபரை விசாரித்து, அவர் மீது கிளாம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்து விசாரணை செய்ததில் எட்டு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதியானது. இதனையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து செங்கல்பட்டு போக்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.பின்னர் அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டது.
பள்ளி விடுமுறை நாட்களில் பெற்றோர்கள் வேலைக்குச் செல்லும் சூழலில் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் மூலம் அந்த கோர முகங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குழந்தைகள் தங்கள் பாதுகாப்பற்ற சூழலை உணர்ந்தால் உடனடியாகப் புகாரளிக்க 1098 என்ற குழந்தை உதவி மைய எண்களைப் பயன்படுத்தலாம். இதுகுறித்து பெற்றோர்களும் அவர்களுக்கு விழிப்புணர்வு கொடுக்க வேண்டும். பெற்றோர் இல்லாத நேரத்தில் குழந்தைகளை தனியாக விடுவதைத் தவிர்த்து, நம்பிக்கையானவர்களின் கண்காணிப்பில் விடுவதே இதுபோன்ற கொடூர சம்பவங்களைத் தடுக்க ஒரே வழியாகும் என சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.