க்ரைம்

முதல்வர் வீட்டின் பின்புறம்.. அரிசி பையில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தை! CCTV-யில் சிக்கிய.. தாய் மற்றும் மகள்?

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நீலாங்கரை போலீசார் குழந்தை கிடந்த இடத்திலும்..

Muthu Lakshmi

சென்னை நீலாங்கரை, கபாலீஸ்வரர் நகர் தெற்கு 4-வது மெயின் ரோடு பகுதியில் வழக்கம் போல் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில் பொதுமக்கள் காலை நடை பயிற்சி மேற்கொண்ட போது குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது.

இதைப்பார்த்த நபர் ஒருவர் பக்கத்தில் சென்று பார்த்த போது பிறந்து சில மணி நேரமே ஆன பெண் சிசு ஒன்று 10 கிலோ அரிசி பையில் இருந்துள்ளது. அந்த பிரதான சாலையில் தமிழக முதலமைச்சரின் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அரிசி பையில் இருந்த  குழந்தையை மீட்டு நீலாங்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

நீலாங்கரை காவல் நிலையம்

உடனடியாக இதுகுறித்து நீலாங்கரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் குழந்தை கிடந்த இடத்திலும், மருத்துவமனை சென்றும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பின்னர் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு பிரிவு போலீசாரிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது. மேலும், இதுகுறித்து அரசு குழந்தைகள் நலக் குழுமத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பச்சிளம் பெண் குழந்தை மேல் சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அங்கு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே பச்சிளம் குழந்தையை சாலையோரத்தில் விட்டுச் சென்றது யார்? எந்தச் சூழ்நிலையில் குழந்தை அங்கு வைக்கப்பட்டது? என்பது குறித்து நீலாங்கரை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும், கபாலீஸ்வரர் நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து, பச்சிளம் பெண் குழந்தை வீசி சென்ற தாயை கண்டுபிடித்தனர்.

விசாரணையில் பச்சிளம் குழந்தை வீசி சென்ற இடத்தின் அருகில் உள்ள குடியிருப்பில் பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியை பார்த்தபோது குழந்தையின் தாய், அவரது தாய்யுடன் நள்ளிரவில் சாலைக்கு சென்றுள்ளார். அங்கு அந்த பெண்ணின் அம்மா கை காட்டும் இடத்தில் பச்சிளம் குழந்தையை வைத்துவிட்டு அழுது கொண்டே வீடு திரும்பியது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

பின்னர் குழந்தையின் தாய் மற்றும் அவரது தாய் இதுவரையும் கண்டுபிடுத்த அதிகாரிகள் பச்சிளம் குழந்தை அனுமதிக்கப்பட்டிருந்த எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மேலும் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.