death 
க்ரைம்

ஓடும் பேருந்தில் கேட்ட அலறல்... மனம் நொந்த கள்ள காதல் ஜோடி எடுத்த விபரீத முடிவு!!

இதனை அறிந்த மனைவி ரேவதி இவர்கள் இருவரையும் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த...

மாலை முரசு செய்தி குழு

சமீப காலமாக உலகம் முழுவதும் திருமணத்தை மீறிய உறவுகளும், அதனால் ஏற்படக்கூடிய வன்முறைகளும் பெருகி வருகின்றன, அதற்கு காரணம் இந்தியா ஒரு Paradoxical சமூகம். இங்கே பல தலைமுறைகளாக ஆண்களே ஆதிக்கம் செலுத்திவருகின்றனர். அவர்களின் தேவைகளும் ஆசைகளும் முன்னிலைப்படுத்தப்படுகின்றது. இயல்பாகவே படுக்கை அறையிலும்  அவர்களே ஆதிக்கம் செலுத்துபவர்களாக இருக்கின்றனர். பரிணாம வளர்ச்சி நெடுகிலும் “வலிமையையும் - அதிகாரமும்” நிறைந்த உயிரினமே ஆதிக்கம் செலுத்தி வந்திருக்கிறது. இங்கேயும் அப்படிதான். ஆண்கள் அதிகாரம் செலுத்தும் நிலையை எட்டியவுடன் பெண்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள அவர்களால் இயலவில்லை. ஆனால் 100% ஆண்களும் இப்படித்தான் இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது..21 ஆம் நூற்றாண்டிலும் 50% -க்கு மேற்பட்ட ஆண்கள் உடல் ரீதியான பெண்ணின் தேவையான  முன்முடிவுக்கு கொண்டு செல்லும் இடத்தில்தான் இருக்கின்றனர். இந்த சூழலில்தான் அதிக அளவிலான திருமணத்தை மீறிய உறவுகள் அதிகரிக்கின்றன.

அந்த வகையில் மனதை உலுக்கும் மற்றொரு சம்பவம் தமிழகத்தில் நடந்துள்ளது. ஈரோட்டை சேர்ந்தவர் ராஜ்குமார் இவருக்கு ரேவதி என்ற மனைவி உள்ளார்.  ஆனால் இவர்களுக்கு இடையில் சுமிதா என்ற பெண் வந்துள்ளார். நட்பாக ஆரம்பித்த சுமிதாவுடனான உறவு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. 

இதனை அறிந்த மனைவி ரேவதி இவர்கள் இருவரையும் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த இந்த காதல் ஜோடி  மதுவில் விஷம் கலந்து குடித்துவிட்டு, கோவையிலிந்து சேலத்திற்கு பஸ் ஏறியிருக்கிறார்கள்.. குமாரபாளையம் அருகே சாப்பிடுவதற்காக பஸ்ஸை நிறுத்தியபோது, அருகில் இருந்த நபர் அலறியுள்ளார். அப்போதுதான் கள்ளக்காதல் ஜோடி மயங்கி விழுந்து கிடப்பது தெரியவந்தது. 

உடனே இவர்களை மீட்டு  மருத்துவமனையில் அனுமதித்தும்கூட, சுமிதாவும், ராஜ்குமாரும் உயிரிழந்துவிட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.