lucknow sexual assult 
க்ரைம்

3 வயசு குழந்தையை கடத்தி.. சர்வநாசம்! ஒரு நொடி கூட தாமதிக்காமல் களமிறங்கிய போலீஸ்.. என்கவுண்டரில் சுட்டுக்கொலை!

நாங்க வேலை முடிச்சுட்டு தூங்கிட்டு இருந்தோம். அதிகாலை 4 மணிக்கு ஒரு முதியவர் எங்களை எழுப்பி, குழந்தை பத்தி சொன்னார். உடனே லோக்பந்து மருத்துவமனைக்கு கூட்டிட்டு போனோம்”னு தெரிவிச்சிருக்காங்க.

மாலை முரசு செய்தி குழு

உத்தரபிரதேச தலைநகரமான லக்னோவில் நடந்த ஒரு பயங்கர சம்பவம் நாடு முழுவதையும் உலுக்கியிருக்கு. ஆலம்பாக் மெட்ரோ ஸ்டேஷன் அருகே பாலத்துக்கு கீழே தூங்கிக்கிட்டு இருந்த 3 வயசு குழந்தையை கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி, போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

ஜூன் 5, 2025 அன்று அதிகாலை 3.30 மணி அளவில, லக்னோவில் ஆலம்பாக் மெட்ரோ ஸ்டேஷன் அருகே ஒரு பாலத்துக்கு கீழே, தன்னோட அம்மாவோடு தூங்கிக்கிட்டு இருந்த 3 வயசு குழந்தையை ஒரு மர்ம நபர் கடத்தப்பட்டு, பயங்கரமான பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கடுமையான காயங்களோடு விடப்பட்டிருக்கு. இந்த சம்பவத்தைப் பற்றி ஒரு மாற்றுத் திறனாளி, குழந்தையோட கதறல் சத்தத்தை கேட்டு, பிறகு காவல்துறைக்கு தகவல் கொடுத்திருக்காங்க.

குழந்தையோட குடும்பம், “நாங்க வேலை முடிச்சுட்டு தூங்கிட்டு இருந்தோம். அதிகாலை 4 மணிக்கு ஒரு முதியவர் எங்களை எழுப்பி, குழந்தை பத்தி சொன்னார். உடனே லோக்பந்து மருத்துவமனைக்கு கூட்டிட்டு போனோம்”னு தெரிவிச்சிருக்காங்க.

மருத்துவமனையில மருத்துவர்கள், குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதை உறுதி செய்து, கடுமையான காயங்கள் இருப்பதாகவும், நிறைய ரத்தம் இழந்ததாகவும் சொல்லியிருக்காங்க. குழந்தை இப்போ லோக்பந்து மருத்துவமனையில தீவிர சிகிச்சையில இருக்கு, ஆனா உடல்நிலை இன்னும் ஆபத்தான நிலையிலயே இருக்குனு மருத்துவர்கள் தெரிவிச்சிருக்காங்க.

குற்றவாளி, தீபக் வர்மானு அடையாளம் காணப்பட்டிருக்கார். இவருக்கு எதிரா ஏற்கனவே பல குற்ற வழக்குகள் இருக்கு. இவர் வெள்ளை நிற ஸ்கூட்டர்ல குழந்தையை கடத்தி சென்றது CCTV கேமராவுல பதிவாகியிருக்கு. இந்த தகவலின் அடிப்படையில, போலீஸ் உடனே பல குழுக்களை அமைச்சு, குற்றவாளியை தேட ஆரம்பிச்சிருக்கு. 1 லட்சம் ரூபாய் பரிசு தொகையும் அறிவிக்கப்பட்டிருந்தது.

sexual assult and shot dead

இந்நிலையில், ஜூன் 6, 2025 அதிகாலை, கான்டோன்மென்ட் பகுதியில உள்ள தேவி கேடா அருகே போலீஸ், தீபக் வர்மாவை மடக்கியிருக்கு. “சரணடைய சொன்னபோது, அவர் போலீஸ் மேல துப்பாக்கியால் சுட்டிருக்கார். பதிலுக்கு போலீஸ் தற்காப்புக்காக சுட்டதுல, அவர் காயமடைந்து, மருத்துவமனைக்கு கொண்டு போனபோது இறந்துட்டாரு”னு டிசிபி (மத்திய மண்டலம்) அசிஷ் ஸ்ரீவஸ்தவா தெரிவிச்சிருக்கார்.

இந்த என்கவுண்டர் பற்றி சிலர் கேள்வி எழுப்பியிருக்காங்க. ஆனா, உத்தரபிரதேச போலீஸ், இது ஒரு தற்காப்பு நடவடிக்கையா நடந்ததுனு தெளிவு படுத்தியிருக்கு. “குற்றவாளி முதலில் துப்பாக்கியால் சுட்டதால, போலீஸ் பதிலுக்கு சுட வேண்டியதா போச்சு”னு டிசிபி அசிஷ் ஸ்ரீவஸ்தவா விளக்கியிருக்கார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.