
கமலின் அரசியல் பிரவேசம்
தமிழகத்தின் இருபெரும் அரசியல் அலைகள் அடுத்தடுத்து ஓய்ந்தபோது, அதுவரை தங்கள் அதிகாரத்திற்கோ, லாபத்திற்கோ, அங்கீகாரத்துக்காகவோ காத்திருந்தவர்கள் எல்லாம், கோட்டைக்குள் செல்லும் வழியை தேடலாயினர்.
கருணாநிதி-ஜெயலலிதா இவர்கள் இருவரும் ஊழல்வாதிகளாகவே இருந்தபோதும், கொள்கை தெரிந்து அரசியல் செய்தவர்கள், காரணம் இவர்கள் அரசியல் கற்றுக்கொண்ட இடமே, பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்.
இவர்கள் இருவரின் மறைவுக்கு பிறகு தமிழகம் ஒரு வெற்றிடத்தை உணர்ந்தது.
அதிலும் குறிப்பாக ஜெயலலிதா அவர்கள் மறைந்தபோது நடந்த அரசியலை விவகாரங்களை மையப்படுத்தி ஒரு காமெடி படமே எடுக்கும் அளவுக்குத்தான் அதிமுகவினரின் செயல்பாடுகள் இருந்தது.
வெற்றிடத்தை நிரப்ப வந்தாரா கமல்?
திமுக -விற்காவது அரசியல் வாரிசு என ஸ்டாலின் இருந்தார். ஆனால் அதிமுக -வில் ஜெயலலிதா அப்படி யாரையும் அவர் இறக்கும் வரை கைகாட்டவில்லை.ஆகையால் மக்களிடம் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப பல பேருக்கு சாதகமாக ஜெ-வின் மறைவு காலம் அமைந்தது.அந்த சமையத்தில் தான் ரஜினி தனது அரசியல் பிரவேசத்தை தீவிரமாக (2017) துவங்கினார். ஆனால் காலப்போக்கில் சில பல காரணங்களால் அவரால் அரசியலில் நீடிக்க முடியவில்லை.
ஆனால் கமல்ஹாசன் ரஜினிக்கு ஒரு படி முன்னால் போய் திடீரென மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை பிப்ரவரி 21, 2018 மதுரையில் முறையாக துவங்கினார். டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் டெல்லி சட்ட அமைச்சர் சோம்நாத் பாரதி, விவசாயிகள் தலைவர் பி.ஆர். பாண்டியன் ஆகியோர் தொடக்க மாநாட்டில் கலந்து கொண்டனர்.
இவரின் கட்சி கொடி, கட்சியின் சின்னம் டார்ச் என அனைத்துமே அந்த மாநாட்டில் முறையாக அறிவிக்கப்பட்டது. ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அரசியல் மீது கலைத்துறையினர் ஏன் இத்துணை ஆர்வம் காட்டுகின்றனர் என பல விமர்சனங்கள் எழுந்தன. இருப்பினும் எல்லா விமர்சனங்களையும் தாண்டி கமல் கட்சியை துவங்கினார்.
பூடக மொழி மக்களை சேரவில்லையோ..
ஆளுங்கட்சியின் மீதான விமர்சனங்களை ட்விட்டரில் தொடங்கிய கமல், பின்னர் முழு அரசியல்வாதியாகவே களமிறங்கினார். அதன்பிறகு அவர் மக்களைத் தொடர்ந்து சந்தித்து வந்தார். ஆனால் அரசியலின் மிகப்பெரும் மூலப்பொருள் பேச்சு. நல்ல பேச்சு வல்லமை வாய்க்கப்பெற்றாலும் தனது பூடக மொழி தன்மையால் அவர் சொல்லும் கருத்துக்கள் மக்களை சென்று சேரவில்லையோ என்ற கருத்தும் நிலவுகிறது.தி.மு.க-வையும், அ.தி.மு.க-வையும் நேரடியாக விமர்சித்த கமல் பி.ஜே.பி-யை அதுபோல விமர்சிக்கத் தயங்குகிறார் தெளிவற்ற அரசியல் கொள்கையையும் கைகொண்டுள்ளார் என பல விமர்சனங்கள் வந்தன. அதுமட்டுமின்றி ஆரம்பகட்டத்தில் பாரதி கிருஷ்ணகுமார், ஸ்ரீப்ரியா, கு.ஞானசம்பந்தன், விவசாய சங்கத் தலைவர் பாண்டியன், கவிஞர் சினேகன் என பல பேர் இருந்தனர். காலப்போக்கில் யாரையுமே அவருடனான பயணத்தை தொடரவில்லை. காதசியிலிருந்த பல பேர் கமல் ஹாசன் ‘பார்ட் டைம்’ அரசியல் செய்கிறார் என சொல்லி கழன்றுகொண்டனர். இந்த நிலையில்தான் கடந்த 2024 -ம் ஆண்டு மேடையிலே “தான் ஒரு தோற்று போன அரசியல்வாதி” என உருக்கமாக பேசியிருப்பார்.
அரசியல் களத்துக்கு வரும்போது, "தி.மு.க, அ.தி.மு.க என்கிற ஊழல் கட்சிகளைப் புறந்தள்ளுவோம்” என்றார் கமல்ஹாசன். ஆனால்,கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், தி.மு.க-வுடனேயே அவர் கூட்டணியாகக் கைகோர்த்து மாநிலங்களவை எம்.பி -ஆக அறிவிக்கப்பட்டது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
டார்ச்சை உடைத்த ஆண்டவர்
கட்சி ஆரம்பித்த சில நாட்களில் முன்னாள் அரசியல்வாதிகள், ஓபிஎஸ், எச்.ராஜா, ஆகியோர் டிவி -இல் பேசுவதை பார்த்து எரிச்சல் அடைந்த கமல் டார்சால் டிவி -யை உடைப்பது போன்றொரு விமபர பிரச்சாரத்தை அன்றைக்கு மக்கள் நீதி மய்யம் வெளியிட்டது. இன்று அதே சம்பவம் அவருக்கு மிகப்பெரும் விமர்சனமாக் மாறி உள்ளது”டார்ச்சை உடைத்த மானஸ்தன் “ எப்போது எங்கே? எனபாஜக தலைவர்கள் விமசிர்த்து வருகின்றனர்.
மாநிலங்களவை எம்.பி
ஆரம்ப காலங்களில் திமுக-வை கடுமையாக எதிர்த்த கமல் கடந்த தேர்தலில் திமுக -வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.அப்போது அவரின் நிலைப்பாடு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு”மக்கள் நலனுக்காகவே” இந்த முடிவை எடுத்தேன் எனக்கூறியிருந்தார் .
ஆனால் பலர் கமல் தனது வாழ்க்கை சாபல்யத்தை அடைந்துவிட்டார், கூறி வருகின்றனர். ஆனால் அவருக்காகவே கட்சியில் இன்றளவும் உழைத்துக்கொண்டிருக்கும் தொடைநர்களுக்கு கமல் என்ன செய்ய போகிறார்? என்பது தான் முக்கிய கேள்வியாக எழுந்துள்ளது. ஆனால் எது எப்படி இருந்தாலும் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும் அவரின் குரல் “மக்கள் நலனுக்காக” இருந்தால் நல்லதுதான்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.