தருமபுரி அருகே இளம்பெண்ணின் நிர்வாண வீடியோவை கணவருக்கு அனுப்பிய வழக்கில் பூசாரியை கைது செய்த போலீசார் அவரது நண்பரை தேடி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம், கடத்துார் பகுதி கிராமத்தை சேர்ந்த திருமணமான 21 வயதான இளம்பெண் சுமதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தனியார் கல்லுாரியில் பி.பார்ம் படித்து வந்தார். அவருக்கு ஒரு வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் சுமதிக்கு, அவரது கணவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த கணவரின் நண்பர் அர்ச்சகர் ரகுராம் (28) என்பவர் சமாதானம் செய்து வந்துள்ளார். அப்போது சுமதிக்கு ரகுராமிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நெருக்கிய தொடர்பில் இருந்து வந்துள்ளனர். கடந்த மார்ச், 9ம் தேதிசுமதியும் ரகுராமும் காரில் சென்றபோது இருவரும் போட்டோ எடுத்துக் கொண்டுள்ளனர். அதை வைத்து மிரட்டி சுமதியை தன்னுடன் தனிமையில் இருக்க வேண்டும், இல்லையென்றால் போட்டோவை உனது அப்பாவிற்கு அனுப்பிவிடுவேன் என மிரட்டியுள்ளார். இதையடுத்து, ரகுராமுடன் சுமதி தனிமையில் இருந்துள்ளார். தனிமையில் இருந்ததையும் ரகுராம் போட்டோ எடுத்துகொண்டு மிரட்டி வந்துள்ளார். அதன்பின் ரகுராமுடன் பேசுவதை சுமதி தவிர்க்க முயன்றுள்ளார்.
கடந்த மூன்று மாதத்திற்கு முன் சென்னையை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் சுமதியை மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது “ரகுராம் எனது நண்பர்.. அவர்தான் உன் நம்பர் கொடுத்தார்” என்றும் “நீ என்னுடன் பேசவில்லை என்றால் நீயும், ரகுராமும் எடுத்துக் கொண்ட போட்டோவை உனது கணவர் மற்றும் அப்பாவிற்கு அனுப்பிவிடுவேன் எனக் கூறி மிரட்டியுள்ளார். இதனால் ராஜ்குமாருடனும் சுமதி பேசி வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன், ராஜ்குமார் பெண்ணிடம் வீடியோ காலில் பேசும் போது, ஆடைகளை கழற்றச் சொல்லியுள்ளார். கடந்த 2ம் தேதி பெண்ணை மொபைல்போனில் தொடர்பு கொண்ட ராஜ்குமார் தன்னுடன் தனிமையில் வரவில்லையென்றால் வீடியோ காலில் பேசிய நிர்வாண வீடியோவை உனது கணவருக்கு அனுப்பி விடுவேன்” என்று கூறி மிரட்டியுள்ளார். அதையடுத்து கடந்த 7ம் தேதி சுமதியின் கணவர், அண்ணன் மற்றும் மாமனாருக்கு அனுப்பியுள்ளார். மேலும் சுமதிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் அரூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அர்ச்சகர் ரகுராமை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அவரின் நண்பர் ராஜ்குமாரை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட ரகுராம் மேலும் இது போல் வேறு பெண்களை மிரட்டி பாலியல் தொந்தரவு செய்துள்ளரா? என விசாரித்து வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்