ஆந்திர மாநிலம் கோனசீமா மாவட்டம் மெரகபாலம் கிராமத்தை சேர்ந்தவர் 22 வயதான புஷ்பா. இவருக்கும் இவரது நெருங்கிய உறவினரான பிரதாப் என்பவருக்கும் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது பிரதாப் புஷ்பா தம்பதிக்கு மூன்று வயதில் ஒரு மகன் உள்ள நிலையில் புஷ்பா தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனது தாய் வீட்டிற்கு சென்ற புஷ்பா வேலைக்காக விஜயவாடாவில் வாழ்ந்து வந்துள்ளார்.
அப்போது புஷ்பாவிற்கு அதே பகுதியை சேர்ந்த ஏசி மெக்கானிக் ஷேக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது நாளடைவில் காதலாக மாறி இருவரும் ஒருவருக்கொருவர் காதலித்து வந்துள்ளனர். காதலனை அழைத்து கொண்டு தனது சொந்த ஊரான மெரகபாலம் கிராமத்திற்கு சென்ற புஷ்பா அங்கு தனியாக வீடு எடுத்து காதலனுடன் வசித்து வந்துள்ளார். விஜயவாடாவில் இருந்தவரை புஷ்பாவை நன்றாக பார்த்து கொண்ட காதலன் கிராமத்தில் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக்கியுள்ளார்.
மேலும் எந்த வேலைக்கும் செல்லாமல் புஷ்பாவை குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் குடிக்க பணம் வேண்டும் என்பதால் ஷேக் புஷ்பாவை பாலியல் தொழில் ஈடுபட சொல்லி வற்புறுத்தியுள்ளார். இதற்கு புஷ்பா மறுப்பு தெரிவிக்கவே இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு புஷ்பா தனது தாய் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். இருப்பினும் புஷ்பாவை விடாத காதலன் ஷேக் தொடர்ந்து அவரிடம் பணம் கேட்டும் பாலியல் தொழிலில் ஈடுபடுமாறும் வற்புறுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த (ஜூலை 16) தேதி இரவு புஷ்பாவின் வீட்டிற்கு சென்ற ஷேக் அவரிடம் பணம் கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஷேக் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் புஷ்பாவை தாக்கியுள்ளார். இதனை பார்த்து தடுக்க வந்த புஷ்பாவின் தாய் கங்கா மற்றும் அவரது சகோதரரையும் தாக்கிய ஷேக் மீண்டும் புஷ்பாவை கால்கள் மற்றும் மார்பு பகுதியில் சரமறியாக குத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இதில் புஷ்பா சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை அடுத்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து புஷ்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் காயமடைந்த கங்கா மற்றும் புஷ்பாவின் சகோதரரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு, வழக்கு பதிவு செய்து ஷேக்கை தேடி வருகின்றனர். காதலனால் பெண் வீட்டில் வைத்து கொலை செய்யப்பட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.