குழந்தைகளுக்கு பல் மருத்துவ சிகிச்சை அளிக்கும்போது மயக்க நிலையில் இருந்த மூன்று குழந்தைகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய வழக்கில், அரிசோனாவைச் சேர்ந்த பல் மருத்துவ உதவியாளருக்கு, 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக மாரிகோபா மாவட்ட வழக்கறிஞர் ரேச்சல் மிட்செல் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார்.
கிடியாட்ரிக் டென்டல் நிறுவனத்தில் எக்ஸ்-ரே தொழில்நுட்ப வல்லுநராகப் பணியாற்றிய டெலோன் கார்சியா, வழக்கமான பல் மருத்துவ சிகிச்சைகளின் போது, நான்கு முதல் ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளிடம் தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆறு வயது சிறுமியின் பெற்றோர், தனது குழந்தையின் பல் மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவரின் சந்திப்பின்போது 29 வயதான கார்சியா, அந்த பெண் குழந்தையை தவறாக தொட்டு, புகைப்படம் எடுத்ததாகக் கூறி அளித்த புகாரின் அடிப்படையில், சாண்ட்லர் காவல்துறையினர் 2024 மே மாதம் விசாரணையாளர்கள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
புலனாய்வாளர்களின் கூற்றுப்படி, ஆறு வயதுக் குழந்தைகளை அவர்களின் பற்களைப் பரிசோதிப்பதற்காக வேறு அறைக்கு அழைத்துச் செல்வது ஊழியர்களின் வழக்கம் என்று கார்சியா அந்தக் குழந்தையிடமும் அவர்களின் பெற்றோரிடமும் கூறியுள்ளார். இதனையடுத்து, கார்சியா அக்குழந்தையை ஒரு தனி அறைக்கு அழைத்துச் சென்று, அந்தச் சிறுமியை முறையற்ற விதத்தில் தொட்டு, புகைப்படம் எடுத்துள்ளார். இதனை, துப்பறிவாளர்கள் பின்னர் உறுதி செய்துள்ளனர்.
பின்னர் துப்பறிவாளர்கள், 2022 செப்டம்பரில் எக்ஸ்-ரே எடுக்கும்போது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான மற்றொரு ஆறு வயது சிறுமியிடம் கேட்டபோது அவரும் கார்சியாவை குற்றம்சாட்டியுள்ளார். இதனையடுத்து, கார்சியாவின் தொலைபேசியை தடயவியல் வல்லுநர்கள் ஆய்வு செய்ததில், பாலியல் வன்கொடுமை நடந்த நேரத்தில் மயக்க நிலையில் இருந்த நான்கு வயது சிறுமியின் ஆபாசப் படங்கள் இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இதனையடுத்து, மே 2024-ல் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஆரம்பத்தில் 14 கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டிருந்த கார்சியா, ஒரு குழந்தையை பாலியல் ரீதியாகத் துன்புறுத்த முயன்ற குற்றச்சாட்டு, ஒரு குழந்தையுடன் பாலியல் உறவு கொண்ட குற்றச்சாட்டு மற்றும் ஒரு குழந்தையை பாலியல் ரீதியாகச் சுரண்ட முயன்ற குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், கார்சியா தனது சொந்த பாலியல் திருப்திக்காக குழந்தைகளிடம் பொய்யான ஒரு நம்பிக்கையை கொடுத்து அந்த நம்பிக்கையைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளார்," என்று தண்டனைத் தீர்ப்புக்குப் பிறகு நீதிபதி கூறியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.