professor  
க்ரைம்

தன்னிடம் படித்த மாணவியைக் கூட.. எப்படி இப்படி நாசம் பண்ண மனசு வந்துச்சு? விளையாட்டு பல்கலைக்கழகத்தில் நடந்த விபரீதம்!

உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் மாணவியை

Anbarasan

சென்னையை அடுத்த, வண்டலூர் கேளம்பாக்கம் இடையே உள்ள மேலக்கோட்டையூரில், இயங்கி வரும் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் மாணவியை கர்ப்பமாக்கிய உதவி பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கருகலைப்பிற்காக, படூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றபோது மருத்துவர்கள் கொடுத்த தகவலின் பேரில், தாழம்பூர் போலீசார் நாமக்கல்லை சேர்ந்த அரசு கல்லூரி உதவி பேராசிரியர் ராஜேஷ் குமாரை(45) கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கருகலைப்பிற்காக சென்ற மாணவியை, தனியார் மருத்துவமனையில் இருந்து மீட்டு சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர் காவல் துறையினர். 

விளையாட்டு பல்கலைக்கழகத்தில், மாணவியுடன் திருமணத்திற்கு மீறிய உறவில் ஈடுபட்ட பேராசிரியர், மாணவி கர்ப்பமாகியதை மறைக்க கரு கலைக்க சென்ற சம்பவம் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

பாதிக்கபட்ட மாணவியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் உதவி பேராசிரியர் ராஜேஷ் குமாரை கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்