துடிக்க துடிக்க கொலை செய்த காவல் அதிகாரி.. ஆயுதங்களோடு சரணடைந்தார்! அரிவாளால் வெட்டியும் ஆத்திரம் அடங்காதது ஏன்?

காவல் நிலையத்தில் சில வழக்குகள் நிலுவையில் உள்ளது
azhagu pandi
azhagu pandi
Published on
Updated on
1 min read

மதுரை மாநகர் ஆனையூர், தெற்கு தெரு பகுதியை சேர்ந்த  அழகுபாண்டி (34) என்பவர் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்துவருகிறார். இவர் மீது காவல் நிலையத்தில் சில வழக்குகள் நிலுவையில் உள்ளது.  அதே பகுதியில் அழகுபாண்டியின் வீட்டின் அருகே  நடராஜன் (75) என்ற ஓய்வு பெற்ற தலைமை காவலர் தனியாக வசித்து வருவத்தோடு  மளிகை கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் அழகுபாண்டியும், நடராஜனும் அடிக்கடி சந்தித்து பேசிவந்துள்ளனர். 

இதனிடையே அவ்வப்போது அழகுபாண்டி மதுகுடிப்பதற்க்காக நடராஜனிடம் பணம் கேட்டுள்ளார். இதனால் அவ்வப்போது இருவருக்கும் இடையே மதுபோதையில் வாக்குவாதம் ஏற்பட்டுவந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை தனது கடையில் இருந்த நடராஜனிடம், அழகுபாண்டி மது அருந்த பணம் கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார். 

இதனையடுத்து மேலே உள்ள வீட்டிற்குள் நடராஜன் சென்றபோது அவரை பின்தொடர்ந்து அழகுபாண்டியும் மதுபோதையில் சென்றுள்ளார். பின்னர் திடிரென இருவருக்கும் வீட்டிற்குள் இருந்தபோது மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதனால் ஆத்திரமடைந்த ஓய்வு பெற்ற தலைமை காவலர் நடராஜன் அழகுபாண்டியை அரிவாளால் தலையில் வெட்டியுள்ளார். இதனையடுத்து மயங்கி விழுந்த அழகு பாண்டியை தொடர்ந்து கம்பி உள்ளிட்டவற்றால் கொடூரமாக தாக்கி  ஆயுதத்துடன் காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார். 

அழகுபாண்டியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்த போது ரத்த வெள்ளத்தில் கிடந்த அழகு பாண்டி, உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார். 

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த  காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் மது போதையில் இருவர் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக அழகுபாண்டியை கொலை செய்தது தெரியவந்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com