சேலம் மாவட்டம், ஆத்தூர் பகுதியில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு பொங்கல் பண்டிகைக்காக வெளியூரிலிருந்து 11 வயது சிறுமி வந்துள்ளார். வீட்டில் பொங்கல் வைத்து கொண்டாடிய நிலையில் உறவினர் வீட்டுக்கு பக்கத்துக்கு தெருவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறுவர் மற்றும் சிறுமியர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தியுள்ளனர். அதனை பார்த்த 11 வயது சிறுமி தானும் கலந்து கொள்ள வேண்டும் என அடம் பிடித்த சிறுமியின் தந்தை அவரை போட்டி நடக்கும் இடங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.
பின்னர் அங்கிருந்த மற்ற சிறுவர் மற்றும் சிறுமிகளுடன் சேர்ந்து 11 வயது சிறுமியும் போட்டியில் பங்கேற்று விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென சிறுமி மயக்கம் அடைந்து கீழே விழுந்திருக்கிறார். திடீரென மகள் மயக்கம் அடைந்த அதிர்ச்சியில் என்ன செய்வதென்று புரியாமல் தவித்த சிறுமியின் தந்தை அங்கிருந்த சிலரிடம் “நீங்கள் பாத்துக்கோங்க நான் போய் என் பொண்டாட்டிய கூட்டிட்டு வரேன்” என சிறுமியை தனியாக விட்டு விட்டு மனைவியை அழைத்து வர உறவினர் வீட்டிற்கு சென்றிருக்கிறார்.
இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி பெரியசாமி என்பவர் “என் வீடு பக்கமாக இருக்கிறது அவரது தந்தை வரும் வரை நான் சிறுமியை அங்கு அழைத்து சென்று என் வீட்டில் உள்ள மருந்து கொடுக்கிறேன்” என் கூறி மயக்கத்தில் இருந்த சிறுமியை அவரது வீட்டிற்கு தூக்கி சென்று சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டிருக்கிறார். அப்போது மயக்கம் தெளிந்த சிறுமி உறவினர் வீட்டிற்கு சென்று நடந்ததை கூறியுள்ளார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இது குறித்து ஆத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை ஏற்ற காவல்துறையினர் நேரடியாக கூலித்தொழிலாளி பெரிய சாமியிடம் விசாரணை மேற்கொண்டு அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். போட்டியில் விளையாடிய 11 சிறுமியை கூலித் தொழிலாளி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.