

கர்நாடக மாநிலம், பெங்களூரு பகுதியில் உள்ள ராம்நகரில் வசித்து வந்தவர் 34 வயதுடைய ஷர்மிளா. இவர் அதே பகுதியில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் வேலைசெய்து வந்த நிலையில் தனது தோழியுடன் வீடு எடுத்து தனியாக வசித்து வந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஷர்மிளாவின் தோழி அவரது சொந்த ஊருக்கு சென்றிருந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த ஷர்மிளா சடலமாக கிடந்துள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ஷர்மிளாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வீட்டில் மின்கசிவு ஏற்பட்டு இருந்ததால் மூச்சு திணறி உயிரிழந்திருப்பார் என நினைத்த காவல்துறையினர் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் ஷர்மிளா உடலில் பல்வேறு இடங்களில் காயம் மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது.
இதை தொடர்ந்து விசாரணையை தீவிர படுத்திய போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை செய்ததால் ஷர்மிளா இறப்பதற்கு முன் தினம் இரவு அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் 19 வயதுடைய கர்னல் ஷர்மிளா வீட்டிற்கு சென்று வந்தது தெரியவந்ததது. எனவே சந்தேகமடைந்த போலீசார் கர்னலை பிடித்து விசாரணை செய்தது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பக்கத்துக்கு வீட்டில் வசிக்கும் கர்னலுடன் ஷர்மிளா நன்றாக பேசி பழகி வந்த நிலையில் கர்னலுக்கு ஷர்மிளா மீது தவறான ஆசை ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் ஷர்மிளா மட்டும் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த கர்னல் அக்கம் பக்கத்தினருக்கு தெரியாமல் அவரது வீட்டிற்கு சென்று அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்திருக்கிறார். அதற்கு ஷர்மிளா மறுப்பு தெரிவித்து கத்தி கூச்சலிடவே ஆத்திரமடைந்த கர்னல் அவரை சரமாரியாக தாக்கி கீழே தள்ளி விட்ட நிலையில் பலத்த காயமடைந்த ஷர்மிளா சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார். இதனை தொடர்ந்து கர்னலை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தனது ஆசைக்கு இணங்காத பெண்ணை 19 வயது வாலிபர் அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.