deepak krishna and smitha  
க்ரைம்

“உடலுறவு வைத்து கொள்ள மறுத்த பெண் அடித்து கொலை” - நாய்களை பராமரிக்க சென்றவருக்கு நேர்ந்த கொடூரம்.. ஒரு வாரத்திற்கு பின் வெளியான உண்மை!

இதற்கு ஸ்மிதா மறுத்த நிலையில் அவரை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்ய..

Mahalakshmi Somasundaram

கர்நாடக மாநிலம், பெங்களூரு மாவட்டம் சூலிபெலே கிராமத்தை சேர்ந்தவர் தீபக் கிருஷ்ணா. இவர் தொழிலதிபராக உள்ள நிலையில் சூலிபெலே கிராமத்தில் ஒரு பெரிய பெண்களை வீடு கட்டி அதில் பல தெரு நாய்க்களுக்கு அடைக்கலம் கொடுத்து வளர்த்து வந்ததாக சொல்லப்படுகிறது. நாளடைவில் தொழில் அதிக கவனம் செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டதால் நாய்களை கவனிக்க முடியவில்லை எனவே நாய்களை இங்கேயே தங்கி கவனித்து கொள்ள ஒரு பணியாளர் தேவை என விளம்பரம் செய்திருக்கிறார். அதனை பார்த்த கேரளா மாவட்டம், திருச்சூர் பகுதியை சேர்ந்த ஆண்டனி என்பவரது மனைவியான 47 வயதுடைய ஸ்மிதா தீபக் கிருஷ்ணாவிடம் வேலைக்கு சேர்ந்திருக்கிறார்.

ஸ்மிதா உடன் சேர்ந்து அதே திருச்சூர் பகுதியை சேர்ந்த அலீனா மற்றும் சின்னு என்ற இரண்டு பெண்கள் தீபக்கின் வீட்டில் சமையல் வேலை செய்வதற்காக பணிக்கு சேர்ந்துள்ளார். இந்நிலையில் கடந்த (மே 3) ஆம் தேதி பங்களாவில் ஸ்மிதா நாய்களை கவனித்து கொண்டிருந்த போது அப்பகுதிக்கு சென்ற தீபக் கிருஷ்ணா சிறிது நேரம் ஸ்மிதாவிடம் பேசிக்கொண்டு அவருக்கு நாய்களை பராமரிக்க உதவியதாக சொல்லப்படுகிறது. பின்னர் ஸ்மிதாவை தனது அறைக்கு அழைத்த தீபக் தன்னுடன் உடலுறவு வைத்துக் கொள்ள சொல்லி வற்புறுத்தியிருக்கிறார். இதற்கு ஸ்மிதா மறுத்த நிலையில் அவரை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்திருக்கிறார்.

எனவே ஸ்மிதா தன்னை காப்பாற்றிக்கொள்ள கத்தி கூச்சலிடவே ஆத்திரமடைந்த தீபக் கிருஷ்ணா, அவரது தலையில் கட்டையால் பலமுறை அடித்திருக்கிறார் தொடர்ந்து அவரை தலையை சுவரில் மோதி காயப்படுத்தியுள்ளார். இதற்கிடையில் ஸ்மிதாவின் சத்தம் கேட்டு அறைக்குள் சென்ற சின்னு மற்றும் அலீனாவை மிரட்டிய தீபக் அங்கிருந்து தப்பி சென்றிருக்கிறார். எனவே ஸ்மிதாவை மிட்ட அலீனா மற்றும் சின்னு அவரை மருத்துவமனையில் அனுபதித்த நிலையில் மேல் சிகிச்சைக்காக சொந்த ஊரான கேரளாவிற்கு அழைத்து சென்றதாக சொல்லப்படுகிறது.

அங்கு ஸ்மிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். தகவலறிந்து மருத்துவமனைக்கு சென்ற ஸ்மிதாவின் கணவர் ஆண்டனி இது குறித்து கேரள போலீசாருக்கு தகவல் அளித்த நிலையில், மருத்துவமனைக்கு சென்ற கேரள போலீசார் அலீனா மற்றும் சின்னு அளித்த தகவலின் படி சூலிபெலே கிராமத்திற்கு சென்று தெலுங்கானா போலீசார் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து தனிப்படை அமைத்து தீபக் கிருஷ்ணாவை நேற்று முன்தினம் ஹைதராபாதில் வைத்து கைது செய்தனர். பணிக்கு சென்ற பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்து அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.