abai kumar  
க்ரைம்

“என் மனைவி வேறு ஒருவனுடன் கள்ள தொடர்பில் இருக்கிறாள்” - வாட்ஸ்அப் எண்ணிற்கு வந்த அந்தரங்க வீடியோக்கள்.. உடல் சிதறி உயிரிழந்த கணவன்!

திவிஷா தனது கள்ளக்காதலனுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை...

Mahalakshmi Somasundaram

பீகார் மாநிலம், முசாஃபர்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் 26 வயதுடைய அபய் குமார். இவர் ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் வேலை செய்து வந்த நிலையில் இவரது குடும்பத்தினர் அபய் குமாருக்கு திருமணம் ஏற்பாடுகள் செய்து வந்திருக்கின்றனர். அதன்படி கடந்த ஆண்டு (டிச 1) ஆம் தேதி அபய் குமாருக்கு, திவிஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு பிறகு அவர் தனது மனைவியுடன் ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்திருக்கிறார். அப்போது திரிஷாவிற்கு அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் அவர்களது பழக்கம் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது.

இதனைத்தொடர்ந்து திவிஷா தனது கள்ளக்காதலனை உறவினர் என்று கணவர் அபய் குமாருக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். பின்னர் அடிக்கடி அபய் குமார் வீட்டில் இருக்கும்போது கள்ளக்காதலன் வீட்டுக்கு சென்று திவிஷாவுடன் பழகி வந்திருக்கிறார். இருவரும் மிக நெருக்கமாக பழகி வந்த நிலையில் இவர்களது உரையில் அபய் குமாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே அபய் குமார் மனைவியின் நடத்தையை கண்காணிக்க தொடங்கிய நிலையில் திவிஷா தனது தாய் வீட்டிற்கு செல்வதை கூறி விட்டு சென்றுள்ளார். அப்போது தனியாக இருந்த அபய் குமாருக்கு திவிஷா தனது கள்ளக்காதலனுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை யாரோ வாட்சப்பில் அனுப்பி இருக்கின்றனர்.

அந்த போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பார்த்து மன உளைச்சலில் இருந்த அபய் குமார் உடனடியாக தனது சொந்த கிராமத்திற்கு சென்று குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டிருக்கிறார். பின்னர் கடந்த செவ்வாய்க்கிழமை காலை யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறிய அபய் குமார் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதற்கிடையில் அவரது குடும்பத்தினர் அவரை தேடி வந்த நிலையில் போலீசார் உதவியுடன் அவர் சடலமாக மீட்கப்பட்டார். இதனை தொடர்ந்து போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் அபய் குமார் அறையில் இருந்து தற்கொலை கடிதம் ஒன்று கிடைத்துள்ளது.

அதில் "என் மனைவி வேறொருவனுடன் கள்ள தொடர்பில் இருக்கிறாள், இதனால் நான் கடும் மன உளைச்சலில் இருக்கிறேன்; என் மரணத்திற்கு அவள் மட்டுமே காரணம், என் குடும்பத்தினர் என்னை மன்னித்து விடுங்கள்” என எழுதியுள்ளார். கடிதத்தை கைப்பற்றிய போலீசார் அவரது மனைவி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது உண்மையிலேயே தற்கொலை தான? தற்கொலைக்கான காரணம் வேறு ஏதேனும் உள்ளதா என்பது குறித்தும் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியின் கள்ளக்காதலால் கணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் - 104

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்