“கள்ளக்காதலனுடன் சேர்ந்து 2 வயது மகனை அடித்து கொன்ற தாய்” - வீட்டு சுவரில் இருந்த ரத்தக்கறை.. 20 நாட்களுக்கு பின் வெளிவந்த உண்மை!

கள்ளக்காதலன் நவீன் ஆகிய இருவரும் சேர்ந்து குழந்தையை சரமாரியாக தாக்கி தூக்கி வீசியதில் தலையில் ரத்த கசிவு...
jothi and jothi in husband with child
jothi and jothi in husband with child
Published on
Updated on
2 min read

தெலுங்கானா மாநிலம், மேட்சல் மாவட்டம் கீசார பகுதியில் வசித்து வருபவர் சுவாமி. இவர் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வரும் நிலையில் இவருக்கும் தீகுலா கிராமத்தை சேர்ந்த ஜோதி என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமான நிலையில் 6 வயதில் ஒரு மகளும் 2 வயதில் ஹரிகிரிஷ்ணா என்ற மகனும் இருந்தனர். திருமணமான சில மாதங்களிலேயே ஜோதி தீகுலா கிராமத்தை சேர்ந்த நவீன் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது. சுவாமி அடிக்கடி வேலைக்கு வெளியூருக்கு செல்லும் நிலையில் குழந்தைகளுடன் வீட்டில் இருக்கும் ஜோதி தனது கள்ளக்காதலனை வீட்டிற்கு அழைத்து அவருடன் தனிமையில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது.

வழக்கம் போல கடந்த (மே 29) ஆம் தேதி சுவாமி வேலைக்கு சென்றிருந்த நிலையில் ஜோதி தனது கள்ளக்காதலனை வீட்டிற்கு அழைத்திருக்கிறார். பின்னர் இருவரும் வீட்டில் தனிமையில் இருந்ததாக சொல்லப்படும் நிலையில் ஜோதியின் இரண்டாவது மகன் ஹரிகிருஷ்ணன் தொடர்ந்து அழுது கொண்டே இருந்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த ஜோதி மற்றும் அவரது கள்ளக்காதலன் நவீன் ஆகிய இருவரும் சேர்ந்து குழந்தையை சரமாரியாக தாக்கி தூக்கி வீசியதில் தலையில் ரத்த கசிவு ஏற்பட்டு குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார். குழந்தை உயிரிக்கு போராடுவதை அறிந்து அதிர்ச்சியடைந்த இருவரும் உடனடியாக குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் அங்கு குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

cctv
cctv

இதனை தொடர்ந்து தனது கணவனுக்கு போன் செய்த ஜோதி குழந்தை கட்டிலில் இருந்து கீழே விழுந்து நிலையில் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். உடனடியாக வீட்டிற்கு வந்த சுவாமி மனைவி கூறியதை நம்பி இறுதி சடங்கு செய்து குழந்தையின் சடலத்தை அடக்கம் செய்திருக்கிறார். பின்னர் வழக்கம் போல வேலைக்கு சென்று வந்த சுவாமிக்கு நாளடைவில் ஜோதியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும் வீட்டின் சுவரில் இருந்த ரத்தக்கறையை பார்த்து அதிர்ச்சியடைந்த சுவாமிக்கு குழந்தையின் மரணத்திலும் சந்தேகம் ஏற்பட்ட நிலையில் அருகில் உள்ள வீடுகளில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்திருக்கிறார். அதில் குழந்தை இறந்ததாக சொல்லப்படும் நாளில் ஜோதி நவீன் உடன் இருசக்கர வாகனத்தில் சுற்றி திரிந்தது தெரியவந்துள்ளது.

harikrishnan body
harikrishnan body

எனவே ஆத்திரமடைந்த சுவாமி இது குறித்து தனது மனைவி ஜோதியிடம் கேட்ட போது முன்னுக்கு பின்னாக பதிலளித்த நிலையில் நடந்த சம்பவம் குறித்து கடந்த (ஜூன் 19) காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் (ஜூன் 20) ஆம் தேதி ஜோதியிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து குழந்தையை அடித்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து ஜோதியை கைது செய்த போலீசார் தலைமறைவாக உள்ள கள்ளக்காதலன் நவீனை தேடி வருகின்றனர். மேலும் குழந்தையில் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். கள்ளக்காதல் விவகாரத்தில் பெற்ற தாயே 2 வயது மகனை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும் 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com