க்ரைம்

“காதலியை கொன்று சடலத்துடன் உடலுறவு” - அழுகிய நிலையில் நிர்வாணமாக மீட்கப்பட்ட பெண்ணின் உடல்.. ஆவியுடன் பேச சென்ற காதலன்!

மும்பையில் உள்ள பில்லி சூனியம் வைப்பவர்களிடம் உதவி கேட்டு..

Mahalakshmi Somasundaram

மத்திய பிரதேச மாநிலம், இந்தூர் பகுதியில் உள்ள கல்லூரியில் MBA படித்து வந்த இளம் பெண் 24 வயதுடைய சோனம். இவருக்கும் அதே கல்லூரியில் படித்து வந்த பியூஸ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் காதலிக்க தொடங்கி இருக்கின்றனர். இருவரும் தொடர்ந்து காதலித்து வந்த நிலையில் நாளடைவில் சோனம் பியூஸ் உடன் பேசுவதை குறைத்து கொண்டதாக சொல்லப்படுகிறது. எனவே காதலன் பியூஸ் தன்னை உடனடியாக திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வற்புறுத்தி வந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த (பிப் 12) ஆம் தேதி தனக்கு பிறந்தநாள் என பியூஸ் அவரது வீட்டிற்கு அழைத்திருக்கிறார்.

அதனை தொடர்ந்து சோனம் தனது தங்கையிடம் நண்பனின் பிறந்தநாளுக்கு பியூஸ் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற நிலையில் மறுநாள் வரை வீட்டிற்கு செல்லாமல் இருந்திருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த சோனத்தின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இது குறித்து காவல் நிலையத்தில் புகாரளித்தனர். புகாரின் அடிப்படையில் இனம் பெண்ணை தேடி வந்த போலீசார் அப்பெண்ணின் தங்கை அளித்த தகவலின் படி கடந்த (பிப் 14) ஆம் தேதி பியூஸ் வீட்டிற்கு சென்று பார்த்திருக்கின்றனர். அங்கு வீடு பூட்டப்பட்டிருந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் கதவை உடைத்து பார்த்து போது அங்கு சோனம் உடல் அழுகிய நிலையில் நிர்வாணமாக உயிரிழந்து கிடந்திருக்கிறார்

எனவே உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது வழக்குப்பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து பியூஸை தேடி வந்த நிலையில் நேற்று முன்தினம் (பிப் 16) மும்பையில் உள்ள ஒரு காட்டு பகுதியில் வைத்து கைது செய்தனர். இந்நிலையில் அவரிடம் சோனம் குறித்து பியூஷிடம் விசாரணை மேற்கொண்ட போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சோனம் மற்றும் பியூஸ் காதலித்து வந்த நிலையில் வீட்டிற்கு வந்த சோனமிடம் பியூஸ் தன்னுடன் உல்லாசத்தில் இருக்குமாறு கேட்டதாக சொல்லப்படுகிறது. இதற்கு சோனம் மறுப்பு தெரிவித்த நிலையில் ஆத்திரமடைந்த பியூஸ் சோனம் மார்பின் மீது அமர்ந்து மூச்சு விட முடியாமல் செய்து அவரை கொலை செய்திருக்கிறார்.

மேலும் ஆத்திரம் தீராத நிலையில் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து இளம்பெண்ணை சரமாரியாக குத்தி கொலை செய்திருக்கிறார். பின்னர் மது வாங்கி வந்து மது அருந்திவிட்டு சோனத்தின் சடலத்துடன் உடலுறவு வைத்துக் கொண்டு ஆடைகளை மாற்றிக் கொண்டு வேட்டை விட்டு வெளியேறி இருக்கிறார். மேலும் ஆத்திரத்தில் காதலியை கொன்று விட்டதாக கூறிய பியூஸ் அவரது ஆவியிடம் மன்னிப்பு கேட்க மும்பையில் உள்ள பில்லி சூனியம் வைப்பவர்களிடம் உதவி கேட்டு மும்பைக்கு வந்தது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து போலீசார் அவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இளம் பெண் கொல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.