“கள்ளக்காதலால் நடந்த இரட்டை கொலை” - குத்தி கிழிக்கப்பட்ட வாலிபரின் குடல்… மாலை நேரத்தில் ஈசிஆரில் கொடூரம்!

கள்ளக்காதலை அறிந்த பார்த்திபன் அவரை கண்டித்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே...
“கள்ளக்காதலால் நடந்த இரட்டை கொலை” - குத்தி கிழிக்கப்பட்ட வாலிபரின் குடல்… மாலை நேரத்தில் ஈசிஆரில் கொடூரம்!
Published on
Updated on
2 min read

செங்கல்பட்டு மாவட்டம், சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூர் ரெட்டி குப்பம் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய பார்த்திபன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 35 வயதுடைய ஜமுனா என்ற பெண்ணுக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமான நிலையில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தனர். அப்போது இவர்களின் எதிர் வீட்டில் 32 வயதுடைய சுசில் என்பவர் தனது மனைவி கிரிஜாவுடன் வசித்து வந்தார். இரண்டு குடும்பங்களும் நட்பாக பழகி வந்ததாக சொல்லப்படுகிறது.

அப்போது பார்த்திபன் மனைவி ஜமுனாவுக்கும், எதிர் வீட்டில் வசித்து வந்த சுசிலுடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில் இருவரும் நெருங்கி பழகி வந்திருக்கின்றனர். நாளடைவில் இந்த பழக்கமானது திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. பின்னர் இருவரும் அடிக்கடி யாருக்கும் தெரியாமல் தனிமையில் இருந்து வந்திருக்கின்றனர். ஒரு கட்டத்தில் மனைவியின் கள்ளக்காதலை அறிந்த பார்த்திபன் அவரை கண்டித்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

எனவே இதன் காரணமாக கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு ஜமுனா பார்த்திபனை பிரிந்து சென்று இரண்டு வருடமாக அவரது தாய் வீட்டில் வசித்து வருகிறார். தனது மனைவி பிரிந்து சென்றதற்கு எதிர் வீட்டில் வசித்து வரும் சுசில் தான் காரணம் என்று எண்ணிய பார்த்திபன் சுசில் குடும்பத்துடன் அவ்வப்போது பிரச்சனை செய்து வந்திருக்கிறார். இந்நிலையில் நேற்று (பிப் 16) மாலை சுமார் 5 மணி அளவில் மது அருந்திவிட்டு வீட்டுக்கு சென்ற பார்த்திபன் அவரது பைக்கை வீட்டின் வாசலில் விட்டதால் எதிர் வீட்டில் வசித்து வந்த கிரிஜா பைக் விட்டது இடையூறாக இருப்பதாக கூறி சத்தம் போட்டுள்ளார்.

உடனே மது போதையில் இருந்த பார்த்திபன் கிரிஜாவிடம் வாய் தகராறில் ஈடுபட்டிருக்கிறார். இதனை அறிந்து வேளையில் இருந்து வீட்டிற்கு வந்த வந்த சுசில் பார்த்திபனிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த பார்த்திபன் வீட்டில் இருந்த கத்தியால் சுசில் வயிற்றில் குத்தி உள்ளார். அதை தடுக்க முயன்ற சுசில் மனைவி கிரிஜாவையும் கத்தியால் வயிற்றில் குத்தி கொலை செய்தார். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக கானத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கானத்தூர் காவல் ஆய்வாளர் ஆல்பின்ராஜ் தலைமையிலான போலீசார் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சுசிலை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் சுசில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனை தொடர்ந்து சுசில் மற்றும் அவரது மனைவி கிரிஜா ஆகிய இருவரின் உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Admin

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சுசில் மற்றும் அவரது மனைவி கிரிஜா இருவரை கொலை செய்த வழக்கில் பார்த்திபனை கைது செய்த கானத்தூர் போலீசார் அவரிடம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்த மனைவி விட்டு சென்றதால் அவரது கள்ளக்காதலன் மற்றும் காதலனின் மனைவியை ஆகியோரை கணவன் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com