க்ரைம்

“நீ எனக்கு ஒரு டைம் பாஸ் தான்” - பணம் கேட்டு தொல்லை செய்த காதலி.. கொன்று சடலத்தை பெட்ஷீட்டால் சுற்றிய காதலன்!

மேலும் வீட்டில் காதலை அறிந்ததால் அல்காவின் பெற்றோர் அவருக்கு

Mahalakshmi Somasundaram

உத்திரபிரதேச மாநிலம் பதோஹி பகுதியை சேர்ந்த 25 வயதான சஹாப். பெண்களை காதலிப்பது ஏமாற்றுவதை வழக்கமாக வைத்திருந்த சாஹப் பக்கத்துக்கு ஊரை சேர்ந்த அல்கா என்ற கல்லூரி முதலாமாண்டு படிக்கும் பெண்ணை காதலித்து வந்துள்ளார். சாஹப் பற்றி தெரியாத மனைவி அவரை உண்மையாக காதலித்து வந்துள்ளார். அப்போது கல்லூரியை செல்வதாக வீட்டில் பொய் சொல்லிவிட்டு சாஹப் உடன் ஊர் சுற்றியுள்ளார். 

இதனை பார்த்த அல்காவின் உறவினர் அவரது தந்தையிடம்  அல்கா கல்லூரிக்கு செல்லாமல் வேறு ஒருவருடன் ஊர் சுற்றி வருவதாக தெரிவித்துள்ளனர். எனவே அல்காவின் பெற்றோர் அவரை கண்டித்துள்ளார். உடனே சாஹப்பிற்கு போன் செய்த அல்கா தன்னை திருமணம் செய்து கொள் என வற்புறுத்தியுள்ளார். மேலும் வீட்டில் காதலை அறிந்ததால் அல்காவின் பெற்றோர் அவருக்கு செலவுக்கு கூட பணம் கொடுக்காமல் இருந்துள்ளார். 

எனவே அல்கா தனது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள சஹாபிடம் பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்ததாக சொல்லப்படுகிறது. பணம் கேட்டும்,   திருமணம் செய்து கொள்ளுமாறு  அல்கா கூறியதால் ஆத்திரமடைந்த சாஹிப் அல்காவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி அல்காவை  குறிப்பிட்ட ஹோட்டலுக்கு வரவழைத்த சாஹிப் “நீ எனக்கு ஒரு டைம் பாஸ் தான்” என கூறி அறையில் வைத்தே  அவரை கொலை செய்து பிணத்தை பெட்ஷீட்டில் சுருட்டி வைத்துள்ளார். 

அன்று இரவு அறையை சுத்தம் செய்ய சென்ற ஹோட்டல் ஊழியர் அல்காவின் பிணத்தை பார்த்து அதிர்ச்சியடைந்து ஹோட்டல் நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த நிர்வாகத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அல்காவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளார். மேலும் விள்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

ஹோட்டலில் இருந்த சிசிடிவி காட்சிகள் மற்றும் தகவலை வைத்து சாஹிப் தான் குற்றவாளி என்பதை உறுதி செய்த போலீசார் அவரை கைது செய்ய சாஹிபின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு சாஹிப் இல்லாத நிலையில் அவ்வாறு அக்கா வீட்டை பரிசோதித்துள்ளனர். அப்போது தனது அக்கா வீட்டில் பதுங்கியிருந்த சாஹிப் தப்பிக்க முயற்சித்துள்ளார்.எனவே அவரை சுட்டு பிடித்த போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.