கர்நாடக மாநிலம் கேதனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் 40 வயதான அபிஷேக். இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார், 40 வயதாகியும் விவசாயம் செய்வதால் அபிஷேக்குக்கு திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் இருந்துள்ளது. அப்போது தான் அபிஷேக் பக்கத்து ஊரை சேர்ந்த 36 வயதான பூர்ணிமாவை பற்றி அறிந்துள்ளார். 36 வயதான பூர்ணிமா அதே ஊரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.
36 வயதாகியும் பூர்ணிமாவுக்கும் திருமணமாகாத நிலையில் அவரது வீட்டில் மாப்பிள்ளை தேடி வந்துள்ளனர். எனவே அபிஷேக் பூர்ணிமாவை காதலித்து திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவு செய்து பூர்ணிமாவை பள்ளிக்கு செல்லும் போது பின் தொடர்ந்து வந்துள்ளார், இதனை அறிந்த பூர்ணிமா அபிஷேக்கிடம் தன்னை பின் தொடர வேண்டாம் என கூறியுள்ளார். அதற்கு அபிஷேக் பூர்ணிமாவை காதலிப்பதாக அவரிடம் கூற இதனை மறுத்த பூர்ணிமா தனக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்து வருவதாகவும் பெற்றோர்கள் பார்க்கும் மாப்பிள்ளையை தான் திருமணம் செய்து கொள்வேன் என கூறியுள்ளார்.
பூர்ணிமா கூறியதை கேட்ட அபிஷேக் அவரிடம் “நீங்கள் என்னை காதலிக்கா விட்டாலும் பரவாயில்லை நல்ல நண்பர்களாக இருக்கலாம்” என கூறியுள்ளார், பின்னர் பூர்ணிமாவும் அபிஷேக்குடன் நட்பாக பழகி வந்துள்ளார். ஆனால் தனது எண்ணத்தை மாற்றிக் கொள்ளாத அபிஷேக் தன்னுடைய காதலை மீண்டும் பூர்ணிமாவிடம் தெரிவித்துள்ளார். எனவே பூர்ணிமா அபிஷேக்குடன் பழகுவதை முற்றிலுமாக தவிர்த்து இதை பற்றி தனது பெற்றோர்களிடமும் தெரிவித்துள்ளார். அபிஷேக்கை அழைத்து பேசிய பூர்ணிமாவின் பெற்றோர்கள் தங்களது மகளுக்கு நல்ல இடத்தில் சம்பந்தம் அமைந்துள்ளதாக கூறி அவரை விட்டு விலகி விடுமாறு வலியுறுத்தியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த அபிஷேக் தனக்கு கிடைக்காத பூர்ணிமா வேறு யாருக்கும் கிடைக்க கூடாது என அவரை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளனர். அதன்படி பூர்ணிமாவுக்கு போன் செய்த அபிஷேக் கடைசியாக உன்னிடம் பேச வேண்டும் என தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். இதனை நம்பி பூர்ணிமாவும் அபிஷேக் வீட்டிற்கு வெளியில் சென்று அவரை சந்தித்துள்ளார். பூர்ணிமாவை அபிஷேக் வீட்டிற்குள் அழைத்துள்ளார், அதற்கு மறுத்த நிலையில் அவரை ரோட்டில் வைத்து கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
இந்நிலையில் சடலத்தை வீட்டிற்குள் எடுத்து சென்று அதற்கு தாலி காட்டியுள்ளார். பின்னர் அந்த சடலத்துடன் போட்டோ எடுத்த அபிஷேக் அதனை வாட்ஸப்பில் ஸ்டேட்டஸ் வைத்து அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார். பின்னர் அவ்வழியே சென்ற மக்கள் வீட்டு வாசலில் இருந்த ரத்தத்தை பார்த்து சந்தேகம் அடைந்து வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது பூர்ணிமா சடலமாக இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பூர்ணிமாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
தனது மகள் கொலை செய்யப்பட்டதை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பூர்ணிமாவின் பெற்றோர்கள் நடத்தை போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். பூர்ணிமாவின் பெற்றோர்கள் அளித்த தகவலின் படி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் ஆதாரங்களை வைத்து அபிஷேக் தான் குற்றவாளி என்பதை உறுதி செய்து, தப்பி சென்ற அபிஷேக்கை தேடி வருகின்றனர். இளம் பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.