“கல்யாணம் ஆகல குழந்தையும் இல்ல” - நிலத்தை இலவசமாக கொடுக்க மறுத்த பெரியப்பா.. ஆத்திரத்தில் தம்பி மகன் செய்த வெறிச்செயல்!

இதனால் மனமுடைந்த ராமு தனது சொந்த கிராமத்தை விட்டு விருதுநகர் மாவட்டத்தில் நரிக்குடி
“கல்யாணம் ஆகல குழந்தையும் இல்ல” - நிலத்தை இலவசமாக கொடுக்க மறுத்த பெரியப்பா.. ஆத்திரத்தில் தம்பி மகன் செய்த வெறிச்செயல்!
Published on
Updated on
2 min read

சிவகங்கை மாவட்டம் ஆவரங்காடு பகுதியை சேர்ந்த 68 வயதான ராமு. இவருக்கு இரண்டு தம்பிகள் மற்றும் தங்கைகள் இருந்த நிலையில் ஒரு தம்பியும் தங்கையும் திருமணம் ஆகி வெளியூரில் வாழ்ந்து வருகின்றனர். லக்ஷ்மணன் என்ற தம்பி மட்டும் ராக்கு என்றவரை திருமணம் செய்து கொண்டு பாண்டி என்ற மகனுடன் சொந்த ஊரிலேயே வாழ்ந்து வந்த நிலையில் ராமு திருமணம் செய்துகொள்ளாமல் கருவாடு தொழில் செய்து வாழ்ந்து வந்துள்ளார்.

திருமணம் ஆகாமல் வாழ்ந்த ராமு எப்போது அந்த ஊரில் உள்ள திருநங்கைகளுடன் பழகி வந்துள்ளார். கருவாடு தொழில் வந்த பணத்தில் சொந்த ஊரில் விவசாய இல்லத்தை வாங்கிய ராமு திருநங்கைகளுடன் பழகுவதால் ஊரே அவரை தப்பாக பேசியுள்ளது. இதனால் மனமுடைந்த ராமு தனது சொந்த கிராமத்தை விட்டு விருதுநகர் மாவட்டத்தில் நரிக்குடி பேருந்து நிறுத்தம் அருகே குடிசை அமைத்து வாழ்ந்துள்ளார். இவரது நிலத்தில் லட்சுமணன் மகன் பாண்டி விவசாயம் செய்து வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் ராகுவிற்கு பணத்தை தேவை ஏற்பட்டதால் தனது நிலத்தை விற்க முடிவு செய்துள்ளார். இதனை அறிந்த பாண்டி ராமுவிடம் நிலத்தை விற்க வேண்டும் என வாக்குவாதம் செய்துள்ளார். எனவே ராமு பாண்டியையை பணத்தை கொடுத்து நிலத்தை வாங்கி கொள்ள அறிவுறுத்தியுள்ளார். இதற்கு மறுத்த பாண்டி “உனக்கு கல்யாணம் ஆகல குழந்தைகளும் இல்ல என்னை மகனா நினைச்சு நிலத்தை குடுங்க” என கேட்டுள்ளார். இதனை ஏற்காத ராமு வேறு ஒருவருக்கு நிலத்தை விற்க முடிவு செய்துள்ளார்.

Admin

பின்னர் ஆவரங்காடு பகுதியை சேர்ந்த ஒருவருக்கு நிலத்தை விற்க முடிவு செய்து விரைவில் பத்திரப்பதிவு நடக்க இருந்துள்ளது. இதனை அறிந்த பாண்டி ராமுவை கொலை செய்ய வேண்டும் என்று முடிவு செய்து இரவோடு இரவாக சிவகங்கையில் இருந்து விருதுநகருக்கு சென்று ராமுவை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார். விடிந்ததும் ராமுவின் உடலை பார்த்த பகுதியில் சென்ற மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர் .

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராமுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு. வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் இருந்த சிசிடிவி கட்சியின் அடிப்படையில் பாண்டியை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். நிலத்திற்காக சொந்த பெரியப்பாவை ஒருவர் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com