பீட் மாவட்டத்தில் நடுங்க வைக்கும் பாலியல் வன்கொடுமை நடந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்பாஜோகை கிராமப்புற காவல் நிலைய எல்லைக்குள், அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இரண்டு வயது சிறுமி தனது 15 வயது உறவினரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம்.
பீட் மாவட்டத்தில், 15 வயது சிறுவன் ஒருவன், 2 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். பாதிக்கப்பட்ட சிறுமியின் மரணத்திற்குப் பிறகு அளிக்கப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் இந்தச் சம்பவம் தெரியவந்துள்ளது. அதிர்ச்சியளிக்கும் விதமாக, குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர் ஆவார். குற்றம் சாட்டப்பட்டவர் தனது கைப்பேசியில் ஆபாசமான காணொளியைப் பார்த்த பிறகு இந்தக் குற்றத்தைச் செய்ததாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், கிடைத்த தகவலின்படி, அம்பாஜோகை தாலுக்காவில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட 2 வயது சிறுமி, மார்ச் 17, 2026 அன்று தனது வீட்டின் முன்புள்ள தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்தார். ஆரம்பத்தில், இது ஒரு விபத்து என்று கருதப்பட்டதால், காவல்துறை இதனை விபத்து மரணம் என வழக்குப் பதிவு செய்தது. இருப்பினும், அம்பாஜோகையில் உள்ள சுவாமி ராமானந்த் தீர்த்த கிராமப்புற அரசு மருத்துவமனையின் மருத்துவர்கள் பிரேத பரிசோதனையின் போது, அந்தச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதைக் கண்டறிந்தனர். அதன் பின்பு, தீவிரத்தை உணர்ந்த காவல் ஆய்வாளர் முரளிதர் கோக்லே, காவல் கண்காணிப்பாளர் நவ்நீத் கன்வத், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சேத்னா டிட்கே மற்றும் உதவி காவல் கண்காணிப்பாளர் ஹிருஷிகேஷ் ஷிண்டே ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் உடனடியாக ஒரு முழுமையான விசாரணையைத் தொடங்கினார்.
இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையின் போது, காவல் ஆய்வாளர் முரளிதர் கோக்லே தலைமையிலான குழு மிகவும் ரகசியமான தகவல்களைச் சேகரித்து வந்தனர். பாதிக்கப்பட்டவர் இறந்த பிறகு, அவரது 15 வயது அத்தை மகன் கடந்த மூன்று நாட்களாக எதுவும் சாப்பிடாமல் தொடர்ந்து அழுது வந்திருக்கிறான். அவனது நடத்தை காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் காவல்துறையினர் அவனிடம் விசாரித்தபோது, அச்சிறுவன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டான். பாதிக்கப்பட்ட சிறுமியின் மரணத்திற்கு எட்டு நாட்களுக்கு முன்பு, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், குற்றம் சாட்டப்பட்ட சிறுவன், 2 வயது குழந்தைக்கு சாக்லேட்டுகளைக் கொடுத்து தனது கைப்பேசியில் ஆபாச வீடியோக்களைப் பார்த்தபடியே அவரைப் பாலியல் வன்புணர்வு செய்துள்ளான். அதற்கு முன்பும் அச்சிறுவன், அந்த சிறுமியை ஒரு முறை பாலியல் வன்புணர்வு செய்திருக்கிறான்.
குற்றம் சாட்டப்பட்ட சிறுவன், தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட பிறகு, அவன் மீது அம்பாஜோகாய் கிராமப்புற காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் 2023-இன் பிரிவு 64(1) மற்றும் போக்சோ சட்டம் 2012ன் பிரிவுகள் 4, 6, 8 மற்றும் 12 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல் ஆய்வாளர் முரளிதர் கோக்லேவே அரசு சார்பில் புகார்தாரராக மாறி, இக்குற்றத்தை வெளிக்கொணர்ந்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.