மயக்க ஊசி செலுத்தி பெண்ணை சீரழித்த மருத்துவர்.. ஆபாச படங்களை வைத்து மிரட்டிய கொடூரம்!

புகைப்படங்களை பொதுவெளியில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி மருத்துவர் தன்னைத் துன்புறுத்தி வந்ததாகவும்
hyderabad crime
Published on
Updated on
1 min read

இந்தூரில் 30 வயது பெண்ணுக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவர். ஆபாச புகைப்படங்களை வைத்து மிரட்டிய இவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

மார்ச் 22 ஆம் தேதி இரவு பட்கொண்டா காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின்படி, மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு முன்பு வயிற்று வலி காரணமாக உள்ளூர் மருத்துவர் ஷாஹித் என்ற சயீத் கானின் மருத்துவமனைக்குச் சென்றதாக அப்பெண் குற்றம் சாட்டியுள்ளார் என காவல் துணை கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) உமாகாந்த் சௌத்ரி தெரிவித்தார். சிகிச்சையின் போது மருத்துவர் அப்பெண்ணுக்கு ஊசி போட்டுள்ளார். அதன் பிறகு அவர் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அவரை ஆபாச புகைப்படங்களை எடுத்து மிரட்டியதாகவும் அப்பெண் குற்றம் சாட்டியதாக அவர் கூறினார். புகைப்படங்களை பொதுவெளியில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி மருத்துவர் தன்னைத் துன்புறுத்தி வந்ததாகவும், மேலும் பாதாளபானி பகுதியில் உள்ள ஒரு ரிசார்ட்டுக்கு, ஆசை வார்த்தைகள் கூறி அழைத்துச் சென்று மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் கூறியதாக சௌத்ரி தெரிவித்தார். மேலும், குற்றம் சாட்டப்பட்ட மருத்துவர் எலக்ட்ரோ ஹோமியோபதியில் பட்டம் பெற்றுள்ளார் என்று கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரூபேஷ் திவேதி தெரிவித்தார்.

மேலும், மருத்துவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஒரு கும்பல் அவரது வீட்டிற்குள் நுழைந்து, வீட்டினை சேதப்படுத்தி, வீட்டின் கதவுக்கும், மோட்டார் சைக்கிளுக்கும் தீ வைத்துள்ளது,” என்று டிஎஸ்பி கூறினார். இதுகுறித்து கானின் உறவினர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். ஆனால் இந்த தீவைப்பு சம்பவம் முழுக்க முழுக்க புனையப்பட்ட கதை என்று பொதுமக்கள் கூறுகின்றனர். இதற்கிடையில், கானின் மருத்துவமனை சட்டவிரோதமானது என்று கூறி, அந்த இடத்திற்கு சீல் வைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com