ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம் கனுபர்த்திபாடு கிராமத்தை சேர்ந்தவர் 33 வயதுடைய ரேவதி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சுமன் என்பவருக்கும் கடந்த 17 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். சுமனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ரேவதி கடந்த நனவு வருடங்களுக்கு முன்பு கணவனை பிரிந்து தனது குழந்தைகளுடன் தந்தை வீட்டில் வசித்து வந்தார். எனவே ரேவதி அருகில் உள்ள துணிக்கடையில் வேலை பார்த்து குடும்பத்தை பார்த்து வந்த நிலையில் ஸ்ரீகாந்த் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இருவரும் தொடர்ந்து நெருங்கி பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது. எனவே கடந்த மூன்று வருடங்களாக தொடர்ந்து இருவரும் பழகி வந்த நிலையில் ரேவதி அதிகமாக போன் பயன்படுத்துவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். இதனால் ஸ்ரீகாந்திற்கு ரேவதியின் நடத்தையின் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அவரிடம் “என்னை விட்டுவிட்டு வேற எவன் கூட பேசுற” என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இதன் காரணமாக ரேவதி அவருடன் பேசுவதை தவிர்த்து வந்திருக்கிறார்.
இந்நிலையில் கடந்த (மே 09) ஆம் தேதி மதியம் காவலாளியாக வேலை பார்க்கும் அவரது தந்தைக்கு ரேவதி உணவு கொடுக்க சென்றிருக்கிறார். அப்போது பெட்ரோல் தீரும் நிலையில் இருந்ததால் தந்தையிடம் உணவு கொடுத்து விட்டு பெட்ரோல் போடா சென்ற போது ரேவதியை வழிமறித்து ஸ்ரீகாந்த் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். பின்னர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரேவதியின் மார்பில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ரேவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் ஸ்ரீகாந்த் அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கிறார்.
இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தாக்கல் தெரிவித்த நிலையில் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்த ரேவதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து கொலை செய்துவிட்டு தப்பி சென்ற ஸ்ரீகாந்த்தை தேடிவரும் நிலையில் ஸ்ரீகாந்தின் தாய்க்கும் கொலையில் தொடர்பு இருப்பதால் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்காதல் விவகாரத்தில் காதலன் கள்ளக்காதலியை குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.