“காதலியை கொன்று சடலத்துடன் உறங்கிய வாலிபர்” - அடுத்தடுத்து நான்கு பேருடன் வாழ்ந்த பெண்.. ஆத்திரத்தில் அடித்தே கொன்ற காதலன்!

உடனடியாக அக்கம்பக்கத்தினர், படப்பை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர்
Published on
Updated on
1 min read

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மாடம்பாக்கம் காவனூர் ஊராட்சியைச் சேர்ந்தவர் 34 வயதுடைய ரஞ்சனி. இவருக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சத்யா என்பவருடன் திருமணமாகி ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக சத்யா இவரை விவாகரத்து செய்த நிலையில், ரஞ்சனி இரண்டாவதாக அசைன் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அசைன் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது.

எனவே இதனையடுத்து மூன்றாவதாக அசார் என்பவருடன் பழகி வந்த ரஞ்சனி, அவரிடமிருந்தும் பிரிந்து, நான்காவதாக சேலத்தைச் சேர்ந்த செந்தில் என்பவருடன் பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறி பின்னர் இவர்கள் திருமணம் செய்து கொள்ளாமலே திருத்தவெளி கிராமம் மந்தைவெளி தெருவில் வாடகை வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தார்.இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு செந்திலும், ரஞ்சனியும் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதாகக் கூறப்படுகிறது.

போதை தலைக்கேறிய நிலையில் இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு நடைபெற்றுள்ளது. இதில் ஆத்திரமடைந்த செந்தில் ரஞ்சனியை சரமாரியாக தாக்கிய நிலையில் செந்திலின் கொடூரத் தாக்குதலைத் தாங்க முடியாமல், ரஞ்சனி சம்பவ இடத்திலேயே பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.அளவுக்கு அதிகமாகக் குடித்திருந்ததால், ரஞ்சனி இறந்தது கூடத் தெரியாமல் செந்தில் இரவு முழுவதும் அந்தச் சடலத்தின் அருகிலேயே படுத்து உறங்கியுள்ளார்.

பின்னர் காலையில் போதை தெளிந்து எழுந்து பார்த்தபோது தான் ரஞ்சனி உயிரிழந்து கிடந்தது செந்திலுக்குத் தெரியவந்தது. இதனால் பதறிப்போன அவர், போலீசாரிடம் மாட்டாமல் இருக்க அங்கிருந்து உடனடியாகத் தப்பியோடிவிட்டார். எப்போது காலை எழுந்து அன்றாட வேலைகளை பார்க்கும் ரஞ்சனி வீட்டை விட்டு வெகுநேரமாகியும் வெளியே வராததால் அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

எனவே அவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்த போது ரஞ்சனி வீட்டில் பிணமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் உடனடியாக அக்கம்பக்கத்தினர், படப்பை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த படப்பை போலீசார், ரஞ்சனியின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இக்கொலைச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள கொலையாளி செந்திலைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com