திருமண மேடையில் இருந்து ஓடிய மணப்பெண்  திருமண மேடையில் இருந்து ஓடிய மணப்பெண்
க்ரைம்

திருமணத்தில் காதலனைக் கண்டு மேடையில் இருந்து ஓடிய மணப்பெண்! சினிமாவை மிஞ்சிய உண்மை நிகழ்வு

மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாராவில் திருமண விழாவின்போது, ​​மணப்பெண் திடீரென மேடையிலிருந்து குதித்து, கையில் மாலையுடன் தன் காதலனை நோக்கி ஓடியதால், திருமண வீட்டில் பரபரப்பு.

மாலை முரசு செய்தி குழு

ஏப்ரல் 27-28 ஆம் தேதி இரவில் உம்ரேத் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அந்தக் காணொளியில், மணமகனும் மணமகளும் தங்கள் கைகளில் மாலைகளை ஏந்தியபடி மாலை அணிவிக்கும் சடங்கிற்காக தயாராக நிற்கிறார்கள். அந்தத் தருணத்தில் திடீரென மணமகள் மாலையுடன் மேடையிலிருந்து கீழே குதிக்கிறார். இதைக் கண்ட மணமகன், திகைத்துப்போய் மேடையில் அப்படியே உறைந்து நின்று கொண்டிருந்தார். கிடைத்த தகவலின்படி, மணமகன் திருமண ஊர்வலத்துடன் பராசியாவிலிருந்து முஜாவர் கிராமத்திற்கு வந்திருக்கிறார். வரவேற்பு, வாணவேடிக்கைகள் மற்றும் விருந்தினர்கள் உணவுக்காகக் கூடுவதுடன் திருமண நிகழ்வுகள் வழக்கம் போல் தொடங்கியது. பின்னர், மாலை அணிவிக்கும் சடங்கு தொடங்கவிருந்த வேளையில், மணப்பெண் கையில் மாலையுடன் மேடைக்கு வந்தார். திடீரென, அவர் சுற்றிலும் பார்த்துவிட்டு மேடையை விட்டு கீழே இறங்கி ஓடிவிட்டார். திருமணத்திற்கு வந்திருந்த விருந்தினர்கள் அனைவரும் அவர்கள் கண்ட காட்சியை கண்டு திகைத்து போயினர்.

திருமணத்தில் இருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். மணமகளின் குடும்பத்தினர் காதலனைப் பிடித்து அடித்து, அவரை அந்த இடத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். அந்தச் சம்பவத்திற்குப் பிறகு, மணமகன் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்ய மறுத்துள்ளார். மணப்பெண் கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த நபருடன் காதலித்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது குடும்பத்தினருக்கு இது தெரிந்திருந்தும், இந்தத் திருமணத்திற்கு அந்த பெண்ணை வற்புறுத்தி வந்துள்ளனர். அதனால் திருமணத்திற்கும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார். இருப்பினும், திருமணத்தில் தனது காதலனைக் கண்டதும், அவர் தனது முடிவை மாற்றிக்கொண்டார். மணப்பெண் தற்போது தனது குடும்பத்துடன் தங்கியுள்ளார். இதனையடுத்து சமூக அவமதிப்பு மற்றும் நிதி இழப்பு ஏற்பட்டதாகக் கூறி, மணமகன் தரப்பினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். காவல்துறையினர் தற்போது இவ்விவகாரத்தை விசாரித்து வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.