தன்னுடைய 18 வயது மகளுக்கு மதுபானம் வழங்கி, மகள் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு மகளுடன் பாலியல் உறவு கொண்ட ஒரு வக்கிர குணம் கொண்ட தந்தைக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் கடும் கோபமடைந்துள்ளார்.
கலிபோர்னியாவைச் சேர்ந்த 41 வயதான ஸ்டீபன் வின்சென்ட் சாவேஸ், முறையற்ற பாலியல் உறவு மற்றும் சிறாருக்கு மதுபானம் வழங்கிய குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, ஸ்டீபனுக்கு ஓராண்டு சிறைத்தண்டனையும், மூன்று ஆண்டுகள் கடுங்குற்ற நன்னடத்தையும் விதிக்கப்பட்டதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் கடந்த செவ்வாயன்று அறிவித்துள்ளனர்.
2025-ம் ஆண்டு ஜூலை மாதம், அவரது மகள், வென்ச்சுரா கவுன்டியில் உள்ள மூர்பார்க்கில் இருக்கும் அவரது வீட்டில் தந்தையுடன் தங்கியிருந்தார். பின்னர், ஒரு குடும்பக் கூட்டத்தில் நாள் முழுவதும் மது அருந்திய பிறகு, ஸ்டீபனும் அவருடைய மகளும் வீட்டில் மது அருந்துவதற்காக மேலும் மதுபானங்களை வாங்கியுள்ளார்.
அதன்பிறகு ஸ்டீபன் அவருடைய மகளுடன் பாலியல் உறவில் ஈடுபட்டார் என்று மாவட்ட வழக்கறிஞர் அலுவலகம் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, இதுநடந்த அடுத்த ஐந்து மாதங்களுக்குப் பிறகு டிசம்பர் மாதம் அவரது மகள் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
தண்டனை அறிவிப்பின் போது அவரது குடும்ப உறுப்பினர்கள் பலர் நீதிமன்றத்தில் உரையாற்றி, பிரதிவாதியின் செயல்களால் ஏற்பட்ட நீடித்த மன அதிர்ச்சியையும் பேரழிவுகரமான இழப்பையும் விவரித்து, பாதிக்கப்பட்டவர்களின் பாதிப்பு குறித்த உணர்ச்சிப்பூர்வமான அறிக்கைகளை வழங்கியுள்ளனர். அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, சட்டப்படி அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச தண்டனையான மூன்றாண்டுகள் மாநில சிறைத் தண்டனையை வழங்குமாறு கோரியுள்ளனர்.
"குற்றவாளி ஒரு தந்தையாகத் தனது நிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாலும், தனது மகளின் நம்பிக்கையை மீறியதாலும், அவரது மகளுக்கு மதுபானம் வழங்கியதாலும், அவரது வாழ்க்கைப் போக்கை நிரந்தரமாக மாற்றிய குற்றச் செயல்களில் ஈடுபட்டதாலும், அரசுத் தரப்பு அதிகபட்சமாக மூன்றாண்டு மாநில சிறைத் தண்டனையைக் கோரியது," என்று துணை மாவட்ட வழக்கறிஞர் டெஸ்ஸா மெக்கார்டி கூறியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.