“அவ வேறொருத்தனுடன் ஓடிப்போயிட்டா” - மருந்தகம் முன்பு கைக்குழந்தையுடன் தவிக்கும் வாலிபர்.. சமூக வலைத்தளத்தில் வீடியோ வைரல்!

வேறொரு இளைஞருடன் திருமணத்திற்கு மீறிய உறவு காரணமாக வீட்டை விட்டு சென்றுவிட்டதாக...
father with their childrens
father with their childrens
Published on
Updated on
1 min read

சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வரும் ஒரு வீடியோ, பார்ப்பவர்களின் மனதை உலுக்கும் வகையில் அமைந்துள்ளது. அதில், கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்த ஏழைத் தந்தை ஒருவர், நாள் முழுவதும் உழைத்து விட்டு மாலையில் வீட்டிற்கு திரும்பிய போது, அவரது பச்சிளம் குழந்தை பசியால் கதறி அள்ளுது கொண்டிருந்துள்ளது. குழந்தையின் அழுகையைக் கண்டு பதறிய அவர், மனைவியை வீட்டின் அனைத்து இடங்களிலும் தேடியுள்ளார். ஆனால், அப்போதுதான் அவரது மனைவி, குழந்தையையும் அவரையும் தவிக்க விட்டுவிட்டு வேறொரு இளைஞருடன் திருமணத்திற்கு மீறிய உறவு காரணமாக வீட்டை விட்டு சென்றுவிட்டதாக அக்கம் பக்கத்தினர் கூறிய தகவல் அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியதாக கூறியுள்ளார்.

இதையடுத்து, தாய்ப்பால் இல்லாமல் பசியால் துடித்துக் கொண்டிருந்த தனது குழந்தையின் உயிரைக் காப்பாற்ற என்ன செய்வது என்று தெரியாமல் சிறு குழந்தைக்கு பால் பவுடர் வாங்க அருகிலிருந்த மருந்தகத்திற்குச் சென்றுள்ளார். அங்கு குழந்தைகளுக்கான லாக்டோஜன் பால் பவுடரை வாங்கிய அவர், இதற்கு முன்பு குழந்தைக்கு பால் பவுடர் கலக்கிய பாலை கொடுத்த அனுபவம் இல்லாததால், மருந்தக ஊழியரிடம், "அண்ணே... இதை எப்படி கலக்கி குழந்தைக்கு கொடுக்கணும்?" என்று கண்ணீர் மல்க கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு, "இது உங்க மனைவிக்குத் தெரியுமே... அவங்க கிட்ட கேளுங்க" என்று ஊழியர் கூறியபோது, "அவ வேறொருத்தனுடன் ஓடிப்போயிட்டா..." என்று அந்தத் தந்தை பதிலளித்ததாகவும், அந்த வார்த்தையைக் கேட்ட அங்கிருந்தவர்கள் அனைவரும் கண்கலங்கியதாகவும் வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், குழந்தையை பசியோடு தவிக்கவிட்டுச் சென்றதாகக் கூறப்படும் பெண்ணின் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில், தாயின் இடத்தையும் நிரப்பி தனது குழந்தையை காப்பாற்ற போராடும் அந்தத் தந்தைக்கு பலரும் ஆறுதல் தெரிவித்து, அவரது நிலை மனதை உலுக்குவதாக பதிவிட்டு வருகின்றனர். ஆனால் இந்த வீடியோ எந்த மாநிலத்தில், எப்போது பதிவு செய்யப்பட்டது என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. எனவே இந்த வீடியோ குறித்து சைபர் கிரைம் எங்கு எடுக்கப்பட்டது பதிவிட்ட நபர் யார் என்பது பற்றிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com