தூத்துக்குடி அருகே உள்ள கே.டி.சி. நகரில் பெண்ணை அடித்து கொலை செய்துவிட்டு அவரை தங்கள் தோட்டத்தில் புதைத்த தம்பதிகளால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இறந்தவர் தற்போது வெளிநாட்டில் பணிபுரியும் கிருஷ்ணகுமாரின் என்பவரின் மனைவி கே. பிருந்தா தேவி என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது பெற்றோர் செவ்வாய்க்கிழமை இரவு சிப்காட் காவல் நிலையத்தை அணுகி, தங்களின் மகள் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை என புகார் அளித்தனர். விசாரணையின் போது, போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், பிருந்தா தேவி அருகிலுள்ள மாரிமுத்து (43) மற்றும் அவரது மனைவி சரவண பிரியா (32) ஆகியோரின் வீட்டிற்குள் நுழைவது தெரியவந்தது. வீட்டின் உள்ளே சென்றது பதிவான நிலையில், அவர் அந்த வீட்டை விட்டு வெளியேறுவது சிசிடிவி காட்சிகளில் பதிவாகவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் அவர்களிடம் போலீசார் விசாரணையை மேற்கொண்டனர். மாரிமுத்து மற்றும் சரவணபிரியா குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர்.
கொலைக்கான காரணமாக கூறப்படுவது, சரவணபிரியா செவ்வாய்க்கிழமை உறவினர் வீட்டிற்குச் சென்ற பிறகு பிருந்தா அவர்களின் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். சரவணபிரியா மற்றும் பிருந்தா தேவி இருவருக்கும் ஒரு நல்ல நட்புறவு இருந்துவந்துள்ளது. இதன் காரணமாக பிருந்தா தேவி மாரிமுத்துவிடமும் நட்புடன் பேசிவந்துள்ளார். சரவணைபிரியா வெளியே சென்றிருந்த நிலையில் பாதியிலேயே திரும்பி வீட்டிற்கு வந்தபோது, அவரது கணவரையும் பிருந்தாவையும் ஒன்றாகக் கண்டதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து சந்தேகமடைந்த சரவணபிரியா, பிருந்தா தேவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் ஒரு கட்டத்தில் மிகப்பெரிய மோதலுக்கு வழிவகுத்துள்ளது. இருவருக்குமிடையே தொடர்ந்த மோதலையடுத்து சரவண பிரியா, மாரிமுத்துவை ஒரு அறைக்குள் பூட்டி வைத்து, பிருந்தா தேவியை கீழே தள்ளி அவரின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, மாரிமுத்து சரவண பிரியாவின் சகோதரர் கார்த்திக்கை அழைத்து, பிருந்தா தேவியின் உடலைத் காரில் ஏற்றி, ஒட்டப்பிடாரம் அருகே உள்ள அவர்களின் தோட்டத்தில் புதைத்ததாக வாக்குமூலம் கொடுத்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. ஆனால், இரு வீட்டினருக்கும் கொடுக்கல் வாங்கல் இருந்துள்ளது. பிருந்தா தேவி சரவண பிரியாவிற்கு நகை கொடுத்துள்ளார் என்றும் அதை திருப்பி கேட்டதற்கு அடித்து கொலை செய்துவிட்டதாக பிருந்தாதேவி வீட்டார் கூறியுள்ளனர். மேலும், பிருந்தாதேவியின் முகத்தில் 7 இடங்களில் காயங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. பிருந்தாதேவியை தலையணையை வைத்து கொலை செய்வதற்கு முன்பு, அவரை கொடூரமாக தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இத்தயையடுத்து, சரவணைபிரியா மற்றும் அவரின் கணவர் மாரிமுத்துவை போலீசார் கைதுசெய்துள்ளனர். மேலும், சரவணபிரியாவின் சகோதரன் கார்த்திக் மற்றும் உடலை எடுத்துச்சென்ற கார் ஆகியவற்றை போலீசார் தேடி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.