அப்போது 47 வயதாக இருந்த ஆண்ட்ரூ பட்லர், தனது முன்னாள் மனைவி கத்ரீனாவிடமும், அவரது மகள் நிக்கோலா யேட்ஸ் உட்பட அவர்களது இரண்டு குழந்தைகளிடமும் வன்முறையாக நடந்துகொண்டார் என்ற குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், 1990-ல் அவரிடமிருந்து பிரிந்து வந்து வாழ்ந்துள்ளார். இங்கிலாந்தின் பர்மிங்காமில் இருந்த அவர்களது வீட்டை பட்லர் விட்டுச் சென்றபோது நிக்கோலாவுக்கு ஏழு வயதுதான் ஆகியிருந்தது. அதன் பிறகு, தனது 20 வயது வரை அவருக்கும் பட்லருக்கும் நிக்கோலாவிற்கும் எந்தத் தொடர்பும் இருக்கவில்லை. அப்போதுதான் இணையத்தின் வழியாக அவரைக் கண்டுபிடித்து அவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அதன்பின்பு ஒருநாள், பட்லரின் ஏழு வயது வளர்ப்பு மகன், 2007-ல் பட்லரும், நிக்கோலாவும் படுக்கையில் ஒன்றாக இருப்பதை முதலில் கண்டுபிடித்து, தன் தாயிடம் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து, அவரது தாய் காவல்துறையினருக்கு இந்த தகவலைக் கொடுத்துள்ளார். அதன் பிறகு, அவர்கள் மீண்டும் இணைந்த ஓராண்டுக்குள், நிக்கோலா, பட்லரின் குடும்பத்தினருக்குத் தெரியாமல் அவருடன் தனியாக குடியேறியுள்ளார். இதனையடுத்து, 2012 ஆம் ஆண்டு ஜூலை மாதம், பட்லரும் நிக்கோலாவும் 2008 முதல் 2010 வரையிலான காலகட்டத்தில் இருவரும் பாலியல் உறவு கொண்டதை ஒப்புக்கொண்டுள்ளனர். பர்மிங்காம் நீதிமன்றத்தில் பட்லருக்கு 10 மாத சிறைத் தண்டனையும், 26 வயதான நிகோலாவிற்கு 26 வார ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையும் வழங்கியது.
முன்னதாக, 2007-ல் முறையற்ற உறவுக் குற்றத்திற்காக அவருக்கு நான்கு மாத ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களின் சமீபத்திய குற்றத்திற்காக அந்த இருவருக்கும் தண்டனை வழங்கிய நீதிபதி, "உண்மையான பாசம் கொண்ட ஒரு உறவு இருந்ததாகத் தெரிகிறது, ஆனால் அது ஒரு முறையற்ற உறவாகவும், ஒட்டுமொத்த சமூகத்தாலும் வெறுக்கத்தக்கதாகக் கருதப்படும் ஒரு உறவாகவும் இருந்தது" என்று கூறினார்.
அவர்களுக்கு முதல் முதலில் தண்டனை விதிக்கப்பட்ட பின்னரும், பட்லருடனான உறவை மறைத்து வைத்து அவருடன் உறவில் இருந்துள்ளார் நிக்கோலா. 2008-ம் ஆண்டில், தனது உயிரியல் தந்தையுடனான உறவை மறைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட புனைப்பெயரான 'ஆண்ட்ரூ பிக்னெல்' என்ற நபருடன் தான் பழகி வருவதாக நிக்கோலா நீதிமன்றத்திடம் கூறியுள்ளார். இருவருக்கும் இடையே பரிமாறப்பட்ட காதல் கடிதங்கள் மற்றும் வாழ்த்து அட்டைகளையும், அவர்களது கைபேசிகள் மற்றும் மடிக்கணினிகளில் இருந்த ஆபாசப் படங்கள் மற்றும் குறுஞ்செய்திகளையும் அதிகாரிகள் அதன்பின்பு விசாரணையில் கண்டுபிடித்தனர்.
நிக்கோலாவில் சகோதரி நடாலி நிக்கோலா தனது வேறொரு காதலனுடன் தங்கி இருப்பதாக கூறிய வீட்டிற்கு சென்ற போது அங்கு அதிர்ச்சியளிக்கு புகைப்படங்களை கண்டுள்ளார். இந்தப் புகைப்படங்களைத் தன் கைப்பேசியில் எடுத்து, தன் பெற்றோரிடம் காட்டினார். அவர்கள், 'ஆண்ட்ரூ பிக்னெல்' என்ற பெயர் கொண்டவர் உண்மையில் பட்லர்தான் என்பதையும், அவர் நிக்கோலாவின் உயிரியல் தந்தை மற்றும் அவளுடைய தாயின் முன்னாள் கணவர் என்பதையும் அடையாளம் கண்டுகொண்டனர். இதனையடுத்து அந்தத் தம்பதியினர் 2010 செப்டம்பரில் போர்ட்ஸ்லி கிரீனில் உள்ள தங்களது அடுக்குமாடிக் குடியிருப்பில் கைது செய்யப்பட்டனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.