csk match mobile theft 
க்ரைம்

உள்ளே IPL மேட்ச் நடக்க.. வெளியே அதைவிட "மெகா" மேட்ச் நடத்திய "செல்லக்குட்டிகளை".. தட்டித் தூக்கிய "சென்னை சிங்கம்"!

கவனத்தை திசை திருப்பி திருடுதல் மற்றும் பிட்பாக்கெட் ஆகிய தொழில்கள் செய்ய இளைஞர்கள் மற்றும் இளஞ்சிறார்களை பயிற்சி கொடுத்ததும் தெரிய வருகிறது.

Anbarasan

கடந்த 28.03.2025ம் தேதி சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் CSK Vs RCB இடையேயான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது, இந்த போட்டிகளில் 20 செல்போன்கள் திருட்டு போனதாக சென்னை சிங்கம் IPL செயலி மூலம் புகார்கள் பெறப்பட்டது. இது செயற்கை நுண்ணறிவு மூலம் கிரிக்கெட் பார்வையாளர்களிடமிருந்து பெறப்பட்ட புகார்கள் மூலம் தெரியவந்தது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களின் உத்தரவுப்படி குற்றவாளிகளை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை பதிவுகளில் செயற்கை நுண்ணறிவு மூலம் பகுப்பாய்வு செய்து சந்தேக நபர்களின் அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதன் மூலம் குற்றவாளிகள் எங்கு ஒருங்கிணைகிறார்கள் என்ற விவரத்தை பெற உதவியாக இருந்தது. இதன் தொடர்ச்சியாக மேல்விசாரணை மேற்கொண்டு 8 குற்றவாளிகள் வேலூர் மாவட்டத்தில் தனியார் விடுதியில் தங்கியிருந்த போது கைது செய்யப்பட்டனர். இதில் ஒருவர் இளம் குற்றவாளி இதில் ஜார்கண்ட் மாநிலம் தின்பஹார் கிராமத்தை சேர்ந்த 6 நபர்கள் மற்றும் மேற்கு வங்காளத்தை சேர்ந்த 2 நபர்களும் இருந்தனர்

இவர்களில்

1. ராஜ்குமார் ஆ/ 22,

2. ஆகாஷ் நோகியா ஆ/வ 23.

3. விஷால் குமார் மாட்டோ ஆ/வ 22,

4. கோவிந்த் குமார் ஆ/வ 21 ஆகியோர் இந்த கும்பலின் தலைவர்களாக செயல்படுகின்றனர். இவர்களிடமிருந்து 39 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு 204.2025 வரை திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் செல்போன் திருட்டு தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர்.

கைது செய்யபட்டுள்ள நபர்களை விசாரணை செய்த போது மேற்படி கும்பல் சிறு சிறு குழுக்களாக பிரிந்து தின்பஹர் கிராமத்தில் இருந்து நபர்களை திருட்டு தொழிலில் ஈடுபடுத்த தினக்கூலி ரூபாய் 1000 என்ற அடிப்படையில் அழைத்து வந்ததும், அந்த நபர்கள் அவர்களது உறவினர்கள் என்பதும் தெரிய வருகிறது. இவர்கள் பேருந்து, இரயில் விமானம் மூலம் பயணம் செய்து ஒரு இடத்தில் ஒன்றாக சேர்ந்து மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையம் மார்கெட், மால், பீச் மற்றும் கிரிக்கெட் நடக்கும் இடங்களில் திருட்டு தொழிலில் ஈடுபட்டது தெரியவருகிறது.

கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை விசாரணை செய்து கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் சென்னை பெருநகர காவல்துறையினர் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது மேலும் ஒரு திருட்டு கும்பல் திருட்டு சம்பவங்களில் ஈடுபட வந்தது தெரியவந்தது. அந்த கும்பலை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. இன்று 07.04.2025 அன்று ராகுல் குமார் ஆ/வ 24. ஜிதர சனி ஆ/வ 30, பிரவீன் குமார் மாட்டோ ஆ/வ 21, ஆகியோர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுவரை கைது செய்யப்பட்ட 2 கும்பலில் மொத்தம் 11 நபர்கள் உள்ளனர் அவர்களிடமிருந்து 74 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை பகுப்பாய்வு செய்யப்பட்டது. விசாரணையில் செல்போன்கள் சென்னை கோயம்பேடு, வடபழனி ஆவடி புரசைவாக்கம் ஐசிஎப், மெரினா கடற்கரை ஆகிய இடங்களிலும் பெங்களூர் மற்றும் திருப்பதி ஆகிய இடங்களில் திருட்டு போனது என தெரிய வருகிறது.

செல்போன்களை திருடியபிறகு அவற்றை தின்பஹார் கிராமத்தில் சென்று மாவால்ட் பகுதியில் உள்ள சந்தையிலும் மேற்கு வங்காளம் மற்றும் வங்காளதேச எல்லை பகுதிகளிலும் விற்பனை செய்வதும் தெரிய வருகிறது. இந்த கும்பல் கவனத்தை திசை திருப்பி திருடுதல் மற்றும் பிட்பாக்கெட் ஆகிய தொழில்கள் செய்ய இளைஞர்கள் மற்றும் இளஞ்சிறார்களை பயிற்சி கொடுத்ததும் தெரிய வருகிறது.

இந்த கும்பல் தொடர்பாக தனிப்படையினர் தொடர் விசாரணை செய்து வருகின்றனர்

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்