சென்னை, வடபழனி பகுதியை சேர்ந்தவர் 42 வயதுடைய ஆதித்தன் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 35 வயதுடைய இலக்கியா என்பவருக்கும் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணமாகி ஒரு மகள் உள்ளார். திருமணத்திற்கு பிறகு இருவரும் தனியாக வீடு எடுத்து தங்கி வந்த நிலையில் கணவன் மனைவி இருவரும் அதிக வயது வித்தியாசம் இருப்பதால் அடிக்கடி கருது வேறுபாடு ஏற்பாடு தகராறு நடைபெற்றுள்ளது. மேலும் ஆதித்தன் இலக்கியாவை அடித்து துன்புறுத்தி வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இலக்கியாவிற்கு கடந்த 2020 ஆம் ஆண்டு நகைக்கடையில் பணியாற்றி வந்த கேரளாவை சேர்ந்த ஜிஷ்ணு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் இலக்கியாவிற்கு திருமணமானது தெரிந்து ஜிஷ்ணு அவரை காதலிப்பதாக தெரிவித்துள்ளார். அதனை ஏற்றுக்கொண்டு இலக்கியாவும் அவருடன் பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது. கடந்த 6 வருடங்களாக கள்ளத்தொடர்பில் இருக்கும் இவர்கள் அடிக்கடி வெளியில் சென்று தனிமையில் சந்தித்து வந்திருக்கின்றனர். இதற்கிடையில் ஜிஷ்ணு சத்யா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு அவ்ருடன் ஒரு மாதம் குடும்பம் நடத்தியதாக சொல்லப்படுகிறது. பின்னர் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு சத்யா ஜிஷ்ணுவை பிரிந்து சென்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த மாதம் கணவனை பிரிந்து காதலன் ஜிஷ்ணுவுடன் வாழ நினைத்த இலக்கியா வீட்டில் கணவர் இல்லாத போது வீட்டில் இருந்த 150 சவரன் நகையையும், சிறிது பணத்தையும் எடுத்துக்கொண்டு குழந்தையுடன் கேரளாவிற்கு சென்றுள்ளார். பின்னர் ஜிஷ்ணுவுடன் வீடு எடுத்து தங்கியதாக சொல்லப்படுகிறது. எனவே மனைவி மற்றும் மகளை காணவில்லை என அதிர்ச்சியடைந்த ஆதித்தன் கடந்த மாதம் காவல் நிலையத்தில் புகைரளித்துள்ளார். ஆனால் போலீசார் இறந்த நடவடிக்கையும் எடுக்காததாக சொல்லப்படுகிறது. இதனால் ஆதித்தன் மனைவி மற்றும் மகளை மீட்டு தருமாறு நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.
இதனை தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜிஷ்ணுவுடன் பழகி வந்த இலக்கியா அவர் மூலம் கர்ப்பமடைந்து கரு கலைத்ததும், அவருக்காக அவ்வபோது கணவனுக்கு தெரியாமல் பணம் கொடுத்ததும் தெரியவந்துள்ளது. மேலும் ஜிஷ்ணுவின் சகோதரரிடம் இலக்கியா இன்ஸ்டாகிராமில் மெசேஜ் செய்ததும் வெளிவந்துள்ளது. அதில் “ஜிஷ்ணு தான் என் உயிர்.. நான் இல்லாம அவன் இருக்கமாட்டான், எங்க காதலை யாருமே புரிஞ்சுக்க மாட்டேங்குறாங்க.. யாரு என்ன சொன்னாலும் பரவ இல்ல நாங்க ஒன்னாதான் வாழ்வோம்.. நான் விவகாரத்திற்கு விண்ணப்பித்திருக்கிறேன்” என கூறியுள்ளார்.
இதனை அறிந்த இலக்கியாவின் கணவர் ஆதித்தன் குழந்தை மற்றும் நகையை மீட்டு தருமாறு கேட்டுள்ளார். மேலும் இப்படி பட்ட இலக்கியாவுடன் என் குழந்தை வளரவே கூடாது என கூறியுள்ளார். கணவனுடன் வாழ்ந்துகொண்டு 6 வருடதங்களாக கள்ளத்தொடர்பில் இருந்த மனைவி குழந்தையை அழைத்து கொண்டு வீட்டில் இருந்த 150 சவரன் நகையை எடுத்து என்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலக்கியாவை கைது செய்த போலீசார் அவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்