“42 வயது பெண்ணுடன்.. ஹோட்டலில் ரூம் எடுத்த 27 வயது இளைஞர்” - 9 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்கப்பட்ட ஜோடி! கள்ளக்காதல் விவகாரமா?

ஹோட்டல் ஊழியர் ஒருவர் அவர்களின் கதவைத் தட்டியும் எந்த பதிலும் வராததால், ஹோட்டல் நிர்வாகம் காவல்துறைக்குத் தகவல் அளித்துள்ளது
uttar pradesh
Published on: 
Updated on: 
1 min read

உத்தரபிரதேச மாநிலம் பஹ்ரைச்சில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில், 27 வயது ஆண் மற்றும் 42 வயது பெண்ணின் உடல்கள் வெள்ளிக்கிழமை அதிகாலை தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இவர்கள் இருவரும் செப்டம்பர் 22 முதல் கோட்வாலி பகுதியில் உள்ள கைலாஷ் ஹோட்டலில் தங்கியிருந்தனர். வேலை தேடி நகரத்திற்கு வந்ததாக ஹோட்டல் ஊழியர்களிடம் தெரிவித்துள்ளனர். 

இறந்தவர்கள், ஸ்ரவஸ்தியைச் சேர்ந்த 27 வயதான ரிங்கு என்ற இளைஞரும் மற்றும் கௌதம் புத்தா நகரைச் சேர்ந்த 42 வயதான பிங்கி என்பது அடையாளம் காணப்பட்டது. ஹோட்டல் ஊழியர்களிடம் நடத்திய விசாரணையில், இருவரும் ஒன்பது நாட்களுக்கு முன்பு ஹோட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளனர். அவர்கள் தங்கியிருந்தபோது, ​​அவர்களின் நடத்தையில் எந்த சந்தேகமும் இல்லை என்றும் ஹோட்டல் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். வியாழக்கிழமை காலையில், இருவரும் காலை உணவு முடித்த பின் வேறு எந்த ஆர்டர் செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். ஹோட்டல் ஊழியர் ஒருவர் அவர்களின் கதவைத் தட்டியும் எந்த பதிலும் வராததால், ஹோட்டல் நிர்வாகம் காவல்துறைக்குத் தகவல் அளித்துள்ளது. 

தகவலை அடுத்து, சுமார் இரவு 8 மணி அளவில், ஹோட்டலுக்குச் சென்று அறைக்கதவை உடைத்துத் திறந்துள்ளனர் காவல்துறையினர். அறைக்குள் இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின் காவல் கண்காணிப்பாளர் விஸ்வஜீத் ஸ்ரீவஸ்தவா மற்றும் நகர கோட்வாலி காவல் நிலைய அதிகாரி பிரஜேந்திர மிஸ்ரா ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்  தடயவியல் குழுவும் அறையை ஆய்வு செய்து ஆதாரங்களைச் சேகரித்தனர். 

விசாரணையின் ஒரு பகுதியாக, ஹோட்டல் பதிவேடு மற்றும் பிற ஆவணங்களை ஆய்வு செய்தது காவல்துறை. ரிங்கு ஹோட்டலில் சமர்ப்பித்த ஆதார் அட்டையில் இருந்து அவரது அடையாளம் உறுதி செய்யப்பட்டது. பின்னர் அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு, மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது. 

இருவருக்கும் இடையிலான உறவின் தன்மை இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று காவல்துறை கூறியது. புலனாய்வாளர்கள், அவர்கள் தங்கியிருந்த பதிவுகள் மற்றும் மரணத்தைச் சுற்றியுள்ள பிற சூழ்நிலைகள் உட்பட சாத்தியமான அனைத்து கோணங்களையும் ஆராய்ந்து வருகின்றனர். உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பிறகு, மரணத்திற்கான சரியான சூழ்நிலைகள் மற்றும் காரணம் தெளிவாகத் தெரியவரும் என்று காவல்துறை கூறியது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com