young girl fall from 4th floor. 
க்ரைம்

“4 -வது மாடியிலிருந்து குதித்து ..” எலும்புகள் நொறுங்கி…உள்ளுறுப்புகள் வீங்கி… 9 வயசு குழந்தைக்கா இப்படி!? ஆதாரத்தை அழித்தததா பள்ளி!?

கீழே விழுந்தபோது அவரது தலை அங்குள்ள தடுப்பு சுவரில் மோதி.....

மாலை முரசு செய்தி குழு

இன்றைய சமூகத்தில்,  இளம் தலைமுறையினர் மிகவும் சென்சிட்டிவான மனநிலையில் தான் இறக்கின்றனர். மேலும் வாழ்வின் சிறு பிரச்சனைகளுக்கு எல்லாம் சாவது எப்போதுமே தீர்வாகாது. படிக்கும் வயதில் சில விஷயங்களை கையாளும் பக்குவத்தை மாணவர்கள் வளர்க்காமல் விடுவதால், சில சமயங்களில் வாழ்வே நரகமாகிவிடுகிறது. அப்படி ஒரு சம்பவம் தான் ராஜஸ்தான் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் பள்ளியின் 4-வது மாடியில் இருந்து 9 வயதுக் குழந்தை கீழே விழுந்து உயிரிழந்துள்ளது. அந்தக்குழந்தை நான்காவது மாடியில் இருந்து குதிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜெய்ப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்த 9 வயது அமய்ரா என்ற சிறுமி, பள்ளியின் நான்காவது மாடியில் இருந்து குதித்து தனது உயிரை போக்கியுள்ளார். நவம்பர் 1- ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. 

குழந்தை குதிக்கும் வீடியோ முழுவதும் சிசிடிவியில் பதிவாகியிருக்கிறது. பிற்பகல் 1.30 மணியளவில் குழந்தை அமய்ரா முதலில் தடுப்புச்சுவர் மீது ஏறி சில நொடிகள் அங்கே அமர்ந்துள்ளார். பின்னர் திடீரென  கீழே குதிப்பது வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது. கீழே விழுந்தபோது அவரது தலை அங்குள்ள தடுப்பு சுவரில் மோதி இருக்கிறது.

உடனடியாக அங்கிருந்தவர்கள் சிறுமியை மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் சிறுமி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். அக்குழந்தை சுமார் 47 அடி உயரத்தில் இருந்து குதித்துள்ளது.

மழுப்பும் பள்ளி நிர்வாகம்!

ஆனால் இதுகுறித்து பள்ளி நிர்வாகம் முறையான விளக்கம் தரவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும் காவலர்கள் அங்குசென்று பார்த்தபோது ரத்தக்கறை உட்பட எந்தவொரு ஆதாரமும் அங்கு இல்லை. குழந்தை விழுந்த இடத்தில் இருந்த ரத்தக் கறைகளைப் பள்ளி நிர்வாகம் சுத்தம் செய்ததாகக் கூறுகிறது. இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்தால் ஆதாரங்களைப் பாதுகாப்பது சட்டப்படி அவசியம். இருப்பினும், பள்ளி நிர்வாகம் அவற்றை அழித்தாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளனர்.

மேலும் பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை “எனது குழந்தை காலை பள்ளிக்கு நார்மலாக தான் வந்தார். பள்ளி நிர்வாகம் ஆதாரத்தை அழித்தது ஏன்? மேலும் சம்பவம் நடந்த இடத்தைக் கூட எங்களை பார்க்க விடவில்லை” என பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் - 104

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.