சென்னை முகப்பேர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் 19 வயதுடைய பெண். இவர் அதே பகுதியில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். மாணவனின் வீட்டின் அருகில் வசித்து வருபவர் 20 வயதுடைய ஷியாம் சுந்தர். இவர் சட்டக்கல்லூரி படித்து வரும் நிலையில் மாணவியை கடந்த சில வருடங்களாக ஒரு தலை பட்சமாக காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது.எனவே மாணவியை தின்தோறும் கல்லூரிக்கு செல்லும் போது பின் தொடர்ந்து தன்னை காதலிக்குமாறு தொல்லை கொடுத்து வந்திருக்கிறார்.
இதனை அறிந்த மாணவியின் பெற்றோர் ஷியாம் சுந்தரை கண்டித்திருக்கின்றனர். இருப்பினும் ஷியாம் மனைவியை பின் தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். இதனால் மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் ஷியாம் சுந்தர் மீது “தங்களது மகளை காதலிக்க சொல்லி டார்ச்சர் செய்வதாக” புகார் அளித்துள்ளனர். இது குறித்து விசாரணை செய்து காவல்துறையினர் ஷியாம் சுந்தரை எச்சரிக்கை செய்து அனுப்பியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று மாணவி காலை வழக்கம்போல கல்லூரிக்கு செல்ல முகப்பேர் மேற்கு வெள்ளாளர் தெரு அருகில் நடந்து செல்லும் போது காரில் வந்த ஷியாம் சுந்தர் அவரை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்திச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த மாணவியின் தாயார் நொளம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனை தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதையடுத்து விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி டோல்கேட் அருகில் வைத்து காரை மடக்கி பிடித்த ரோந்து போலீசார்நொளம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து விக்கரவாண்டிக்கு விரைந்து சென்று மாணவியை மீட்டதுடன் கடத்திச் சென்ற ஷியாம் சுந்தரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் காரில் ஷியாம் சுந்தருடன் சென்ற மற்றொரு பெண் ஒருவரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.