உலகில் உள்ள மனிதர்களை நாம் நல்லவர்கள் - கெட்டவர்கள் என்ற கோணத்தில் மட்டுமே பார்க்கிறோம். இதற்கு இடைப்பட்ட இடத்தில் தான் ஏறத்தாழ எல்லா மனிதர்களும் வாழ்கின்றனர். எல்லா மனிதர்களுக்கும் வெளியில் ஒரு முகமும் உள்ளூர ஒரு முகமும் உண்டு. சில தயக்கம், சமூக கட்டுப்பாடுகளால் மனிதர்கள் புதைத்து வைத்திருக்கும் முகம், வெளிப்படும்போது மிக கோரமான சம்பவங்களை இந்த உலகம் சந்திக்கிறது.
எந்த தொழில்நுட்பமும், சுதந்திரமும், வளர்ச்சியும் மனித தன்மையையும், மனித உயிர்களையும் பாதுக்காக்கத்தான், ஆனால் சமயங்களில் மனிதன் “தனது கையைக்கொண்டே தன் கண்ணை குத்திக்கொள்ளும்” வேலையை செய்துகொண்டுதான் இருக்கிறான்.
பாலியல் இச்சையால் உருவாகும் வன்முறைகள்!!
அதிலும் குறிப்பாக நம் அன்றாடங்களில் நாம் அதிகம் பார்ப்பது, பாலியல் சார்ந்த விஷயங்களால் ஏற்படும் வன்முறைகளைத்தான், எத்தனையோ வகையான பாலியல் விருப்பங்கள் உள்ளவர்கள் இருக்கிறார்கள், ஆனால் அந்த விருப்பமே வேட்கையாக மாறி கட்டுப்படுத்த முடியாத நிலையை எட்டும்போது அது அனைவரையும் பாதிக்கிறது.
அப்படி நாம் யாரும் கற்பனை கூட செய்ய முடியாத ஒரு கோர சம்பவம்தான், ‘ப்ரீத்தி கொலை வழக்கு’ கடந்த ஜூன் மாதம் நடந்த இந்த கோர சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. கர்நாடகாவின் ஹசன் மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயது பெண்மணி ப்ரீத்தி. இவர் தனது கணவன் மற்றும் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளார். ஆனால் இவருக்கு ஏற்பட்ட விபரீத ஆசையால் அவரின் வாழ்வே ஒரு முடிவுக்கு வரும் என்று அவர் நினைத்து பார்த்திருக்க மாட்டார். ஆம்.. யாரென்று தெரியாத ‘Stranger” உடன் உறவு கொள்ள வேண்டும் என வினோதமான ஆசை எழுந்துள்ளது பிரீத்திக்கு. அதற்காக அவர் பேஸ்புக் -ல் புனித் என்ற இளைஞருடன் பேச ஆரம்பித்துள்ளார். பேச ஆரம்பித்த சில நாட்களிலே அவர்கள் போனில் பேசி நேரில் சந்திக்க முடிவு எடுத்துள்ளனர்.
ஒருநாள் தந்து ப்ரீத்தியை ஒரு வாடகைக் காரில் அழைத்துச் சென்று, மைசூரில் சில இடங்களை சுற்றி பார்த்தனர். பின்னர் கிருஷ்ண ராஜா சாகர் அருகே உள்ள ஒரு லாட்ஜில் தங்கினர், அங்கு இருவரும் உடலுறவில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதற்குப் பிறகு, இவர்கள் இருவரும் அவரவர் வீட்டிற்கு திரும்பியுள்ளனர். ஆனால் ப்ரீத்தி அதற்கு பிறகும் அந்த உறவை தொடர விருப்பம் காட்டியுள்ளார். ஆனால் புனித் தயங்கியுள்ளார். இருவரும் கே.ஆர். பேட்டை நோக்கிச் சென்றபோது, ப்ரீதி மீண்டும் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து புனித், கட்டேரகட்டா என்ற காட்டுப்பகுதிக்குள் காரை எடுத்துச் சென்றுள்ளார். அப்போது இந்த மாதிரியான காட்டு பகுதியில் உறவுகொள்ள வேண்டும் என புனித் -ஐ வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. அங்கு இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது, இதில் ஆத்திரமடைந்த புனித் ப்ரீத்தியின் தலையில் அடித்துள்ளார். பின்னர் ஒரு கல்லை அவர் தலையில் போட்டு அவரை கொன்றுள்ளார்.பின்னர் அவர் உடலை தனது கிராமமான கரோட்டி கிராமத்திற்கு கொண்டு சென்று, தனது நிலத்தில் புதைத்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம், மனைவியை காணவில்லை என ப்ரீத்தியின் கணவர் காவல் நிலையத்தில் வழக்கு பதிந்த பின்னரே தெரிய வந்துள்ளது.
உளவியல் சிக்கல்
இம்மாதிரியான அதீதமான மன நிலைக்கு மருத்துவத்தில் கட்டாய பாலியல் நடத்தை Compulsive Sexual Behavior Disorder (CSBD) என்ற பெயரும் உண்டு.
இது கட்டுப்படுத்த முடியாத பாலியல் கற்பனைகள், தூண்டுதல்கள் அல்லது நடத்தைகளில் தீவிர கவனம் செலுத்துவதாகும். இது உங்கள் உடல்நலம், வேலை, உறவுகள் அல்லது உங்கள் வாழ்க்கையின் பிற அம்சங்களை பாதிக்கக்கூடும் என மருத்துவர்கள் சொல்கின்றனர்.
மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒருவிதம் ஒவ்வொரு தனிமனிதனும் தன்னளவில், நிறைகுறைகளை கொண்டவர்கள். நாம் வாழும் இதே சமூகத்தில்தான் குழந்தைகளை வன்கொடுமை செய்யும் ஆட்களும், பிணங்கள், விலங்குகள், என வினோதமான வேட்கை கொண்ட ஆட்களும் வாழ்கின்றனர்.
உணவு, இருப்பிடம் மாதிரி பாலியல் தேவை அடிப்டையானதுதான் என்றாலும், மனிதன் விலங்குகளிலிருந்து வேறுபட காரணம், நமக்கு ஆறு அறிவு வழங்கப்பட்டிருக்கிறது. நமது ஆசைகள் நம்மை கட்டுப்படுத்த முடியவிடாமலும், நம்மால் நமது குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் துன்பத்தை ஏற்படுத்தாமல் இருக்கவுமே நாம் அறிவை பயன்படுத்த வேண்டுமே ஒழிய, சிற்றின்ப நாட்டங்களை மட்டுமே மையமாக வைத்து வாழ்ந்தால், நம் வாழ்வோடு நம்மை சுற்றி இருப்போரின் வாழ்வும் நரகமாகி விடும் என்பதற்கு ப்ரீத்தி ஒரு கண்ணுக்கு தெரிந்த சான்று.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.