தினம் தினமும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கின்றன. பெண்கள் ஏன் தனியாக நிற்கிறார்கள், ஏன் இரவில் ஆண் நண்பர்களோடு சுற்றிக்கொண்டிருக்கிறார்கள் என கேட்கும் இச்சமூகம், பெண்கள் மீது உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் வன்முறைகளை நிகழ்த்தும் ஆண்களை வசைபாடுவதில்லை.
தமிழகம் மீண்டும் ஒரு மோசமான பாலியல் வன்கொடுமை சம்பவத்தை சந்தித்துள்ளது, “கோவை விமான நிலையத்தில் பின்புறம் உள்ள பகுதியில் காரில் ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த 19 வயது கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு ஒரு கும்பல் தப்பிச்சென்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று இரவு 11 மணி அளவில் விமான நிலையத்தின் பின்புறம் உள்ள பகுதியில் காரில் வினித் என்ற நபர் தனது தோழியுடன் காரில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த மூன்று இளைஞர்கள் இவர்கள் தனிமையில் இருப்பதை பார்த்து, இளைஞரை தாக்கி விட்டு அந்த பெண்ணை தூக்கிச் சென்றுள்ளனர்.
இளைஞர்கள் தாக்கியதில் பலத்த காயம் அடைந்த வினித் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். கல்லூரி மாணவியை தூக்கி சென்ற மூன்று பேர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர்.
போலீசார் தேடுதல் வேட்டையின்போது, நிர்வாண நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பெண்ணை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்து உள்ளனர். மாணவியின் ஆண் நண்பர் வினித் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பி ஓடிய மூன்று பேரை பீளமேடு போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.