accust  
க்ரைம்

“ஓடும் பேருந்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை” - 15 வயது சிறுமியிடம் அத்துமீறிய நடத்துநர்.. திருவள்ளூரில் பரபரப்பு!

பணிமனை அருகில் உள்ள புதிய கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் நேர காப்பாளர் அறை அருகில் வைத்து கைது செய்தனர்...

Mahalakshmi Somasundaram

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் இருந்து சோளிங்கர் சென்ற அரசு பேருந்து (எண் 78) மீண்டும் சோளிங்கரில் இருந்து திருத்தணி செல்லும் போது ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் திருத்தணியை சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் 15 வயது பள்ளி மாணவி பாட்டி வீட்டில் இருந்து அவரது வீட்டிற்கு செல்ல தனது சகோதரியுடன் பேருந்தில் ஏறியுள்ளார். பேருந்தில் அதிக கூட்டம் இருந்ததால் கிடைத்த இடத்தில் இருவரும் தனித் தனியாக நின்று கொண்டு இருந்துள்ளனர்.

அப்போது அந்த பேருந்தில் நடத்துனராக பணியில் இருந்த 49 வயதுடைய இளையராஜா என்பவர் கூட்ட நெரிசலை பயன்படுத்தி கொண்டு அந்த பத்தாம் வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவியிடம் டிக்கெட் கொடுப்பது போல பாலியல் சீண்டலில் ஈடுபட்டிருக்கிறார். இதனை தொடர்ந்து மாணவி கத்தி கூச்சலிடவே மேல் திருத்தணி என்ற இடத்தில் அரசு பேருந்து நிறுத்தப்பட்டு பேருந்தில் இருந்த சக பயணிகள் நடத்துனரை கேள்வி கேட்டு கண்டித்தனர். அப்போது தகவலறிந்து அப்பகுதிக்கு வந்த மாணவியின் உறவினர்கள் நடத்துனரை சரமாரியாக தாக்கினர்.

police staion

இதனை தொடர்ந்து நடத்துநர் அப்பகுதியில் இருந்து தப்பி சென்ற நிலையில் மாணவியின் உறவினர்கள் நடந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருத்தணி சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் மற்றும் போலீசார் தப்பிச் சென்ற அரசு பேருந்து நடத்துநர் இளையராஜாவை திருத்தணி அரசு பேருந்து பணிமனை அருகில் உள்ள புதிய கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் நேர காப்பாளர் அறை அருகில் வைத்து கைது செய்தனர்.

பின்னர் இளையராஜாவை திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்த நிலையில் திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளர் விசாரணை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் அரசுப் பேருந்து நடத்துனர் இளையராஜா மீது போக்சோ போக்சோ வழக்கு பதிவு செய்து திருத்தணி திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் செய்து நீதிபதி உத்தரவின் பேரில் புழல் சிறையில் அடைத்தனர். ஓடும் பேருந்தில் 10 வகுப்பு மாணவியிடம் நடத்துனர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.