“என்னை விட்டு அவன் கூட போனதுக்கு சாவு தான் தண்டனை” - காதலனுடன் சென்ற மனைவியை கத்தியால் குத்திய கணவன்… போலீஸ் வாகனத்தில் நடந்த கொடூரம்!

நேரில் சந்தித்து பேசி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது...
kavitha and husband
kavitha and husband
Published on
Updated on
2 min read

தெலுங்கானா மாநிலம், சங்கரெட்டி மாவட்டம் ஜஹீராபாத் பகுதியை சேர்ந்தவர் 36 வயதுடைய சித்தா ரெட்டி. இவர் அதே பகுதியில் தள்ளுவண்டி கடையில் பானி பூரி விற்பனை செய்து வந்த நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு 29 வயதுடைய கவிதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒன்பது மற்றும் ஆறு வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். பானி பூரி கடை வைத்து நடத்தி வந்ததால் சித்தா ரெட்டி இரவு தாமதாக வீட்டிற்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். மேலும் காலையிலேயே வியாபாரத்திற்கு தேவையான பொருட்களை வாங்க சந்தைக்கு சென்று விடுவார் என சொல்லப்படுகிறது.

எனவே மனைவி கவிதா மட்டும் குழந்தைகளுடன் வீட்டில் தனியாக இருந்து வந்த நிலையில் அதிக நேரம் சமூக வலைத்தளங்களில் மூழ்கி கிடந்துள்ளார். வேலை முடிந்து வீட்டிற்கு வரும் சித்தா ரெட்டிக்கு உணவு கூட செய்து கொடுக்காமல் போன் பார்த்துக்கொண்டு இருந்தார் என கூறப்படுகிறது. அப்போது கவிதாவிற்கு இன்ஸ்டாகிராம் மூலம் பக்கத்துக்கு ஊரை சேர்ந்த பவன் குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இருவரும் நேரில் சந்தித்து பேசி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது.

பின்னர் இருவரும் சேர்ந்து அடிக்கடி வெளியில் செல்வதை வழக்கமாக வைத்திருந்த நிலையில் கவிதாவின் மீது கணவர் சித்தா ரெட்டிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் கடந்த (மார்ச்27) தேதி இரவு கவிதா யாருக்கும் தெரியாமல் காதலன் பவனுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதனை அறிந்த சித்தா ரெட்டி தனது மனைவியையும் அவரது காதலனையும் கண்டுபிடித்து தர கோரி ஜஹீராபாத் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

அதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் இருவரது செல்போன் எண்ணையும் ட்ராக் செய்து அவர்கள் ஜாட்செர்லா பகுதியில் இருப்பது அறிந்து அப்பகுதிக்கு கணவர் சித்தா ரெட்டியை அழைத்து சென்றிருக்கின்றனர். பின்னர் கவிதா, பவன் மற்றும் கணவர் சித்தா ரெட்டியை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று கொண்டிருந்த போது வழியில் மனைவியின் செயலால் ஆத்திரமடைந்த கணவன் “என்னை விட்டு அவன் கூட போனதுக்கு சாவு தான் தண்டனை” என கூறி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் போலீஸ் வாகனத்திலேயே மனைவியை சரமாரியாக குத்தி கொலை செய்தார்.

இதனை சற்றும் எதிர்பார்க்காத காவல் துறையினர் கவிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் கணவர் சித்தா ரெட்டி மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். கள்ளக்காதலனுடன் சென்ற மனைவியை காவல் காவல் வாகனத்தில் வைத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com