கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள சாமளாபுரம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் சபரி அன்னூர் அருகே சொக்கம்பளயத்தில் உள்ள அரசு விடுதியில் தங்கி எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பள்ளி விடுமுறை என்பதால் நபர் வீட்டிற்கு செல்ல விடுதியை விட்டு வெளியில் வந்துள்ளார். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் சென்ற ஆரக்குளம் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய மாணிக்கம் என்பவரிடம் லிப்ட் கேட்டு வாகனத்தில் ஏறியுள்ளார்.
மாணவனை தனது நண்பர் வீட்டில் விடுவதாக அழைத்து சென்ற மாணிக்கம் சோமனூரில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மது அருந்திவிட்டு கருத்தம்பட்டி வழியே சென்று காடம்பட்டியில் உள்ள ஒரு பழைய வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சிறுவனை ஓரினசேர்கைக்கு வற்புறுத்திய மாணிக்கம் சிறுவனிடம் பாலியல் அத்துமீறலில் நடந்துகொள்ள முயற்சித்துள்ளார். அதற்கு மாணவன் ஒத்துழைக்காததால் ஆத்திரம் அடைந்த மாணிக்கம் சபரியை சரமாரியாக அங்கிருந்த மரக்கட்டையால் அடித்து துன்புறுத்தியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த சபரி மாணிகத்திடமிருந்து தப்பித்து தனது விடுதிக்கு செல்லும் சாலையில் மயக்கம் அடைந்துள்ளார். ஒரு சிறுவன் சாலையில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடப்பதை பார்த்த அப்பகுதி வழியே சென்ற பொதுமக்கள் சிறுவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் போலீசில் தகவலாளித்துள்ளனர். மருத்துவமனைக்கு வந்த போலீசார் சிறுவனிடம் விசாரணை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில் விடுதி இருந்த பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்த போலீசார் அதில் பதிவான கட்சியில் இருந்த வண்டி எண்ணை வைத்து குற்றவாளியை கைது செய்த போலீசார். மாணிக்கத்திடம் விசாரணை நடத்தி அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ஓரின சேர்க்கைக்கு மறுத்த மாணவன் அடுத்து துன்புறுத்தப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ரத்த வெள்ளத்தில் சிறுவன் சாலையில் கிடந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் பரவி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.