
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரி பேட்டை பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவருக்கு திருமணமாகி 35 வயதில் அருள்ஜோதி என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ள நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு மாரிமுத்து உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து கூலி வேலைக்கு சென்று அருள்ஜோதி மகள்களை காப்பாற்றி வந்துள்ளார். மகனுடன் சேர்ந்து வாழ்ந்து வந்த மாரிமுத்துவின் தந்தை 65 வயதான சேட்டு மகன் இறந்த பிறகும் மருமகள் மட்டும் பேத்திகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் மாமனார் சேட்டு அருள்ஜோதிக்கு பாலியல் ரீதியாக தொடர்ந்து தொந்தரவு அளித்து வந்துள்ளார். இதனால் கோபமடைந்த அருள்ஜோதி இது குறித்து தனது பெற்றோரிடம் தகவல் அளித்த நிலையில் அருள் ஜோதியை சமாதானம் செய்த பெற்றோர்கள் சேட்டுவை கண்டித்துள்ளனர். இதனை அடுத்து பக்கத்துக்கு ஊருக்கு வேலைக்கு சென்ற சேட்டு வாரத்தின் இறுதி நாட்கள் மட்டும் அருள்ஜோதி வீட்டிற்கு வந்து பேத்திகளை பார்த்து செல்வதை வழக்கமாக வைத்திருந்துள்ளார்.
அதுபோல கடந்த (ஜூலை 13) தேதி பேத்திகளை பார்க்க வீட்டிற்கு வந்த சேட்டு அருள்ஜோதி பேத்திகள் இல்லாமல் வீட்டில் தனியாக இருப்பதாய் அறிந்து கொண்டு அவரை வற்புறுத்தி பாலியல் தொல்லை செய்ய முயற்சித்துள்ளார். இதற்கு அருள்ஜோதி மறுப்பு தெரிவிக்கவே ஆத்திரம் முடிந்த மாமனார் சேட்டு மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மருமகளை சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார். அருள் ஜோதியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
மருத்துவமனையில் அருள்ஜோதியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அருள்ஜோதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் சேட்டுவை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மாமனாரால் மருமகள் பாலியல் தொல்லை கொடுத்து குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.