க்ரைம்

“கூகுளில் மாத்திரை பார்த்து கருவை கலைத்து விடு” - ஓட்டல் ரூமில் வைத்து தாலி கட்டிய காதலன்.. தன்னை ஏமாற்றி வேறு திருமணம் செய்வதாக புகார்!

அர்ச்சனாவை ஏமாற்றி கிஷோர் பல முறை உடல் ரீதியாகவும் பாலியல் வன்கொடுமை..

Mahalakshmi Somasundaram

கோவை பீளமேடு பகுதியை சேர்ந்தவர் அர்ச்சனா இவர் அதே பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி மேற்கொள்வதற்காக சென்றிருக்கிறார், அப்போது அங்கு தன்னுடன் உடற்பயிற்சி செய்யும் கிஷோர் என்பவருடன் அர்ச்சனாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில் கிஷோர் அர்ச்சனாவிடம் அவரை காதலிப்பதாக தெரிவித்துள்ளார். அர்ச்சனாவிற்கும் கிஷோரை பிடித்திருந்ததால் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர்.

இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றிரு சென்ற போது அங்கு ஓட்டல் அறையில் வைத்து அர்ச்சனாவுக்கு கிஷோர் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் அர்ச்சனாவை ஏமாற்றி கிஷோர் பல முறை உடல் ரீதியாகவும் பாலியல் வன்கொடுமை செய்ததாக சொல்லப்படுகிறது. இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று நெருக்கமாக இருந்துள்ளனர். அதன் விளைவாக அர்ச்சனா கருவுற்ற நிலையில் கருவை கலைக்க சொல்லி கிஷோரும் அவரது அக்கா யாழினி என்பவரும் மிரட்டியுள்ளனர்.

இதன் காரணமாக அர்ச்சனா கிஷோரின் வீட்டிற்கு நேரடியாக சென்று வாக்குவாதம் செய்துள்ளார். தனது வயிற்றில் வளரும் குழந்தைக்கு கிஷோர் தான் தந்தை எனவும் கண்டிப்பாக தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார். அதற்கு கிஷோரின் அக்கா “கூகுளில் ஏதாவது மாத்திரை பார்த்து நீயாக கருவை கலைத்து விடு இல்லையென்றால் நாங்கள் அந்த குழந்தையை பிறக்க விடாமல் சேது விடுவோம்” என மிரட்டியுள்ளனர்.

மேலும் கிஷோர் தன்னை திருமணம் செய்து கொள்ளாமல் வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்த நிலையில், தன்னை ஏமாற்றிய கிஷோர் மீதும் கருவை கலைக்க சொல்லி மிரட்டிய அவரது அக்கா யாழினி மீதும் கோவை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் காவல்துறையினர் அலைக்கழிப்பதாக கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார், மேலும் அர்ச்சனா கிஷோர் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் அல்லது கிஷோர் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.