கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் சிறுமுகை சாலையில் உள்ள தேவைய்யா நகர் பகுதியை சேர்ந்தவர் 39 வயதுடைய அப்துல் ஹக்கீம். இவர் அதே சாலையில் ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அலாவுதீன் என்பவரது மனைவிக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இந்த பழக்கமானது நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறி இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்ததாக சொல்லப்படுகிறது.
இதனை அறிந்த அலாவுதீன் முதலில் அப்துல் ஹக்கீமிடம் தனது மனைவியுடன் பழகுவதை நிறுத்துமாறு கண்டித்துள்ளார். ஆனால் அப்துல் ஹக்கீம் தொடர்ந்து அலாவுதீன் மனைவியுடன் பழகி வந்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த அலாவுதீன் தனது மனைவியை அவரது தகாத உறவை கைவிடுமாறு கூறியுள்ளார். இருப்பினும் இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் மன உளைச்சல் அடைந்த அலாவுதீன் யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறி குடும்பத்தை பிரிந்து வாழ்ந்து வந்திருக்கிறார்.
இந்நிலையில் நேற்று காலை அப்துல் ஹக்கீம் கடையில் இருந்தபோது அங்கு சென்ற காணாமல் போன அலாவுதீனின் தம்பியான 32 வயதுடைய ஆரிஸ். மற்றும் அவரது நண்பரான 38 வயதுடைய கௌதம் ஆகிய இருவரும் "என் அண்ணியும், நீயும் பேசி பழகியதால் தான் எனது அண்ணன் காணாமல் போய்விட்டான்" எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆரிஸ் அப்துல் ஹக்கீமை கத்தியால் குத்த முயன்றுள்ளார்.
எனவே அப்துல் ஹக்கீமின் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இருவரும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதனால் காயமடைந்த அப்துல் ஹக்கீம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் இதுகுறித்து மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னக்காமனன் தலைமையிலான போலீசார் ஆரிஸ்,கௌதம் ஆகிய இருவரை கைது செய்தனர். தொடர்ந்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் மேட்டுப்பாளையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.