காதலுக்கு தடையாக இருந்ததால் தாயை கொன்ற மகள், ஒரு வருடம் கழித்து கிடைத்த தாயின் உடல்.
ஹைதராபாத்தில் உள்ள ஜவஹர்நகரில், சிறுமி தனது காதலனுடன் சேர்ந்து, தன் தாயைக் கொலை செய்து, அவரது உடலை வீட்டிற்குள் புதைத்ததாகக் கூறப்படுகிறது. இறந்தவரான அஞ்சு டி.ஆர், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு வீட்டுப் பணிப்பெண் ஆவார். ஹைதராபாத்தைச் சேர்ந்த ராணுவத்தில் பணிபுரிபவருமான ஈஸ்வர் டி.ஆர் என்பவரை திருமணம் செய்திருந்தார். சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, அவர் அஞ்சுவை விட்டுப் பிரிந்து தனியாக வாழ்ந்து வாழ்ந்துவந்துள்ளார்.கடந்த ஆண்டு மே மாதம், 40 வயதான அஞ்சு தாசரி ராமையா ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டிலிருந்து காணாமல் போயிருக்கிறார். நாட்கள் வாரங்களாகவும், மாதங்களாகவும் உருண்டோடின. ஆனால், அஞ்சுவைப் பற்றிய எந்த ஒரு தடயமும் கிடைக்கவில்லை. இதனையடுத்து கிட்டத்தட்ட ஓராண்டுகள் கழித்து விசாரணைக்குப் பிறகு, அஞ்சு காணாமல் போன இடத்தில், அதாவது அவரது வீட்டில், ஹைதராபாத் காவல்துறையினர் அவரது உடலைக் கண்டுபிடித்துள்ளனர்.
இதுகுறித்து, மல்காஜ்கிரி துணை ஆணையர் சி. ஸ்ரீதர் கூற்றுப்படி, பாதிக்கப்பட்டவரின் மூத்த மகள் டி. ரோஷினி குமாரி, தனது தாய் மே 12, 2025 அன்று வேலைக்குச் சென்றதாகவும், அதன் பிறகு அவர் திரும்பவே இல்லை என்றும் அக்டோபர் 17, 2025 அன்று புகார் அளித்துள்ளார். அன்றிலிருந்து அவரது தொலைபேசி அணைக்கப்பட்டே இருந்திருக்கிறது. அந்தப் புகாரின் அடிப்படையில், காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது. ஆனால், அவரைக் குறித்த எந்த ஒரு துப்பும் காவல்துறையினருக்கு கிடைக்கவில்லை. அதன் பின்பு விசாரணையின் போது, மோண்டி குமார் சிங் மீது சந்தேகம் கொண்ட காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
2023 டிசம்பரில் சமூக வலைதளத்தின் மூலம் மோண்டி, அஞ்சுவின் இளைய மகளுடன் அறிமுகமாகி இருக்கிறார், அதன் பின்பு இருவருக்கும் இடையே ஒரு காதல் மலர்ந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. தனது மகள் சிறுமியாக இருந்ததாலும், சாதி வேறுபாடுகள் காரணமாகவும் அஞ்சு அந்த உறவை எதிர்த்திருக்கிறார். அதன் பின்பு ஒருநாள், 2024 அக்டோபரில், மோண்டி அஞ்சுவின் இளைய மகளுடன் அவரது வீட்டில் பிடிபட்டுள்ளார். அதன்பின்பு, ஜவஹர்நகர் காவல்துறையினரால் மோண்டி மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டு சுமார் 50 நாட்கள் சிறையில் இருந்தார். சிறையிலிருந்து விடுதலையான பிறகும் அந்த உறவு தொடர்ந்ததால், பொல்லாரம் காவல் நிலையத்தில் அவர் மீது மற்றொரு போக்சோ மற்றும் பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, 2025 ஜனவரியில் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
அஞ்சுவின் தொடர்ச்சியான எதிர்ப்பால் கோபமடைந்த இருவரும், அஞ்சுவைக் கொல்ல சதி திட்டம் திட்டியதாக காவல்துறை தெரிவித்தது. 2025,மே 12 அன்று சிறையிலிருந்து விடுதலையான பிறகு, மோண்டி அஞ்சுவின் வீட்டிற்குள் ஒளிந்துகொண்டார். அஞ்சு வீட்டிற்கு திரும்பி வந்தபோது, திட்டமிட்டபடி அஞ்சுவின் இளைய மகள் தன் தாயைப் பிடித்துக்கொண்டிருக்க, மோண்டி கத்தியால் அஞ்சுவின் மார்பில் குத்தித் தாக்கினார். இதனால் அஞ்சு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொலை நடந்த நேரத்தில், மூத்த மகள் வேலைக்குச் சென்றிருக்கிறார். அவர் திரும்புவதற்குள், இருவரும் உடலை வீட்டில் உள்ள கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்துவிட்டனர். அதன் பின்பு இளைய மகள், 'தொலைபேசி அழைப்பு வந்த பிறகு தங்கள் தாய் வேறு ஒருவருடன் சென்றுவிட்டதாகக் கூறி', தன் சகோதரியைத் தவறாக வழிநடத்தியிருக்கிறார். குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட இருவரும், ஆரம்பத்தில் உடலை வெளியே அப்புறப்படுத்தத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் அது தோல்வியடைந்தது. உடல் அழுகி துர்நாற்றம் வீசத் தொடங்கும் என்பதால், அவர்கள் வீட்டிற்குள்ளேயே ஒரு குழி தோண்டி, சிமெண்ட் மற்றும் மணலைக் கொண்டு உடலைப் புதைத்துள்ளனர். இதுகுறித்து, தனது சகோதரி கேட்டதற்கு, எலித் தொல்லை காரணமாக தரை பழுதுபார்க்கப்படுவதாக அவர்கள் கூறியிருக்கின்றனர்.
அவர்கள் இருவரும் அஞ்சுவின் கைபேசியையும் அழித்துவிட்டனர். இதனிடையில் அந்தப் பெண் கர்ப்பமானதும், மோண்டி 2026 ஜனவரி 8 அன்று யாதகிரிகுட்டா கோவிலில் அவரைத் திருமணம் செய்துகொண்டார். அன்று முதல் தம்பதியினர் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர், மேலும் சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு அவர் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். இதில் அதிர்ச்சியே, தாயை கொன்று புதைத்த அதே வீட்டில்தான் இரண்டு சகோதிரிகளும் வசித்து வந்துள்ளனர். இதன் பின்பு போலீசார் இவர்களை பிடித்து விசாரித்ததில், குற்றம் சாட்டப்பட்டவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில், வீட்டிலிருந்து சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. அல்வால் துணை வட்டாட்சியரால் விசாரணை நடத்தப்பட்டது, மேலும் உஸ்மானியா பொது மருத்துவமனை பேராசிரியர்களால் சம்பவ இடத்திலேயே பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தற்போது, குற்றம் சாட்டப்பட்டவர் அளித்த சாட்சியம் மற்றும் வாக்குமூலத்தின் அடிப்படையில், கொலையாக மாற்றப்பட்டுள்ளன விசாரணை நடந்து வருகிறது. இச்செய்தி அறிந்த அக்கம்பக்கத்தினர் இதை நம்ப முடியாமல் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.