க்ரைம்

பாலியல் தொழிலில் கடன்.. புரோக்கரை கொன்று புதைத்த கூட்டாளிகள்! 7 நாட்களுக்கு பிறகு தோண்டி எடுக்கப்பட்ட உடல்?

தன்னுடைய மாடு இறந்து விட்டதாகவும் அதை புதைக்க வேண்டும் என்று கூறி யாசின் வீட்டுக்கு பின்புறமாக இருந்த வேறொரு நிலத்தில் ஜேசிபி இயந்திரத்தை வைத்து ஆறடி நீளம் தோன்றியுள்ளார்.

Muthu Lakshmi

வேலூர் மாவட்டம் திருவலம் அடுத்த அம்மூண்டி பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ் (33). இவர் காகிதப்பட்டறை பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி நதியா காட்பாடி கல்வி நிறுவனத்தில் கேண்டினில் பணியாற்றி வருகிறார். காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்கள் இருவரும் காட்பாடி கிளித்தான்பட்டையில் வாடகைக்கு வீடு எடுத்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 9-ம் தேதி முதல் கணவர் தேவராஜ் காணவில்லை என மனைவி  நதியா வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்போது போலீசாரிடம் சேண்பாக்கத்தைச் சேர்ந்த யாஷின் (35), சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த உமர் (28)  ஆகியோர் தனது கணவரை காரில் அழைத்துச் சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.

அதன் பேரில் வேலுார் வடக்கு காவல் நிலைய போலீசார்  யாஷின் மற்றும் உமர் ஆகியோரை 14ம் தேதி இரவு பிடித்து விசாரணை செய்துள்ளனர். விசாரணையில் யாஷின் என்பவர் பாலியல் தொழில் புரோக்கராக இருந்ததாகவும் அவருடன் தேவராஜ் வேலை செய்ததும் தெரியவந்தது. மேலும் பாலியல் தொழில் செய்யும் தேஜாஸ்ரீ என்ற பெண்ணிடம் 2 லட்சம் ரூபாயை தேவராஜ் கடன் வாங்கியதும் தெரியவந்துள்ளது.

வாங்கிய கடனை தேவராஜ் திருப்பித் தரவில்லை என்றும் அதனால் தேஜாஸ்ரீ, யாஷினை தொடர்பு கொண்டு தேவராஜ் வாங்கிய கடனை திருப்பித் தரவில்லை எனக் கூறியுள்ளார். இதையடுத்து யாஷினும், உமரும், தேவராஜை காரில் ஏற்றிக் கொண்டு கே.வி.குப்பம் அருகே உள்ள மேல் விளாச்சூர் பகுதியில் உள்ள உமர் வீட்டுக்கு அழைத்துச் சென்று வாங்கிய கடனை  கேட்டு மிரட்டியுள்ளனர்.

அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த உமர் மற்றும் யாஷின் ஆடு வெட்டும் கத்தியை எடுத்து தேவராஜின் கழுத்தில் வெட்டியுள்ளார். அதில் தேவராஜ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிந்துள்ளார். அதையடுத்து யாஷின் உமரின் வீட்டுக்கு பின்னால் தேவராஜின் உடலை புதைத்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக யாசினின் மனைவி ஹரி சுதாவிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் 15ம் தேதி தேவராஜ் உடலை தோண்டி எடுக்க, புதைக்கப்பட்ட இடத்தை கொலையாளிகள் அடையாளம் காட்டியுள்ளனர். கணவர் தேவராஜ் புதைக்கப்பட்ட இடத்தை பார்த்து அவரது மனைவியை நதியா கதறி அழுதுள்ளார். 

தேவராஜின் உடல் புதைக்கப்பட்டு ஏழு நாட்கள் கடந்ததால் உடல் மிகவும் அழுகி துர்நாற்றத்துடன் காணப்பட்டது. போலீசார் விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. யாசின் தன்னுடைய மாடு இறந்து விட்டதாகவும் அதை புதைக்க வேண்டும் என்று கூறி யாசின் வீட்டுக்கு பின்புறமாக இருந்த வேறொரு நிலத்தில் ஜேசிபி இயந்திரத்தை வைத்து ஆறடி நீளம் தோன்றியுள்ளார். பின்னர் ஜேசிபி குழி தோண்டியதும், “நாங்களே புதைத்துக் கொள்கிறோம் நீங்கள் சென்று விடுங்கள்” என்று கூறி ஜேசிபி ஆபரேட்டரை திருப்பி அனுப்பி உள்ளார். அதன் பிறகு கொலை செய்யப்பட்ட தேவராஜின் உடலை தோண்டப்பட்ட குழியில் தள்ளி மண்ணை வைத்து மூடியுள்ளனர். லத்தேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விக்கிரமாசி மேடு பகுதியில் இதேபோன்று ஒரு வீடு எடுத்து அதில் பாலியல் தொழில் செய்து வந்திருந்தார் யாசின். பின்னர் அங்கிருந்து வீடு மாறி தற்போது மேல்விலாச்சூர் பில்லாந்திபட்டு ரோடு பகுதியில் உள்ள தனி வீட்டில் பாலியல் தொழில் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.