க்ரைம்

டெல்லியில் நடந்தது தற்கொலை படை தாக்குதலா? - காரை இயக்கிய மருத்துவருக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு.. வெளியிட்டபட்ட வீடியோ!

வெடிமருந்து வைத்திருந்தவர்களுடன் தொடர்பில் இருந்த மற்றொரு பெண் மருத்துவர் கைது...

Mahalakshmi Somasundaram

டெல்லி செங்கோட்டைக்கு அருகே உள்ள மெட்ரோ நிலையத்தில் கார் வெடித்து 13 பேர் உயிரிழந்த நிலையில், காரின் உரிமையாளர் குறித்து விசாரணை நடத்தி வந்த போலீசார் கார் வெடித்த போது அதை இயக்கிய நபர் குறித்து கண்டறிந்துள்ளனர். காரை இயக்கியவர் ஜம்மு காஷ்மீர் புல்வாமா பகுதியை சேர்ந்த மருத்துவர் முகமது உமர். நேற்று ஹரியானாவில் உள்ள பரிதாபத்தில் வெடிமருந்து வைத்திருந்தவர்கள் இவரது கூட்டாளிகள் என கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே தீவிரவாத தொடர்பில் கைது செய்யப்பட்ட புல்வாமா மருத்துவர்களுடன் முகமது உமர் தொடர்பு வைத்திருந்ததாக தெரிவந்துள்ளது.

எனவே தற்கொலை படையால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதா என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று பரிதாபத்தில் கூட்டாளிகளை கைது செய்த ஆத்திரத்தில் முகமது உமர் இவ்வாறு செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் வெடிமருந்து வைத்திருந்தவர்களுடன் தொடர்பில் இருந்த மற்றொரு பெண் மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. தொடர்ந்து (அக் 19) ஆம் தேதி காஷ்மீரில் தீவிரவாதிகள் எச்சரிக்கை என ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மருத்துவர் முகமது உமரின் தாய் மற்றும் தங்கையை கைது செய்துள்ள போலீசார் அவர்களிடம் வெடி விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த தாக்குதலில் வேறு யாருக்காவது தொடர்புள்ளது என்பது பற்றியும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு மிரட்டல் விடுத்தது யார் என்பது பற்றியும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சுமார் மூன்று மணி நேரம் பார்க்கிங்கில் நின்று கொண்டிருந்த கார் சரியாக 6.48 மணியளவில் மெதுவாக இயக்கப்பட்ட நிலையில் வெடித்துள்ளது.

எனேவ இது திட்டமிட்டு செய்யப்பட்ட தாக்குதலா என்ற சந்தேகம் ஏற்பட்டடுள்ளதாக தெரிவித்திருக்கின்றனர். இந்த வெடிவிபத்தின் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில்  தீவிர சோதனை  மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் காரை முகமது உமர் இயக்கி செல்லும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.