க்ரைம்

“தர்மபுரியில் அடித்து கொல்லப்பட்ட பாஜக நிர்வாகி” - நள்ளிரவில் முகம் சிதைந்து இறந்து கிடந்த கொடூரம்… சொந்த தம்பியே செய்த வெறிச்செயல்!

இதில் முகம் சிதைந்து கீழே விழுந்த சாமுத்திரியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக...

Mahalakshmi Somasundaram

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மோளையானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பழகன். இவருக்கு 40 வயதில் சாமுத்திரியன் மற்றும் 36 வயதில் சத்யா நாதன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில் தனித்தனியாக வீடு எடுத்து குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இதில் சாமுத்திரியன் ஓட்டுநராகவும், தனியாக டிராவல்ஸ் வைத்தும் தொழில் நடத்தி வந்தார். மேலும் இது மட்டுமல்லாமல் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியின் பாஜக கிழக்கு ஒன்றிய துணைத் தலைவராக இருந்து வந்தார்.

இந்த நிலையில் தந்தையின் சொத்து பிரிப்பது காரணமாக சாமுத்திரியனுக்கும், சத்தியநாதனுக்கும் நீண்ட நாட்களாக சொத்து தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. எனவே அண்ணன் தம்பி இருவருக்கும் இடையே சரிவர பேச்சுவார்த்தை இல்லாத நிலையில் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்திருக்கிறது. சத்யநாதன் கூலித்தொழில் செய்து வரும் நிலையில் தனக்கு சொத்து அதிகமாக வேண்டும் என அண்ணனிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

எனவே வழக்கம் போல நேற்று முன்தினம் சத்தியநாதன், சாமுத்திரியினின் வீட்டுக்கு சென்று அங்கிருந்த அண்ணி மற்றும் அண்ணன் குழந்தைகளை தகாத வார்த்தையால் பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். வேலை முடிந்து வீட்டிற்கு வந்த சாமுத்திரியன் நாணத்தை சம்பவத்தை அறிந்து ஆத்திரமடைந்து இது சம்பந்தமாக சத்ய நாதனை கண்டிக்க இரவு மோளையானூரில் உள்ள அவரது தம்பி வீட்டுக்கு சென்று சத்யநாதனிடம் இது குறித்து கேட்டு உள்ளார். அப்போது சத்யநாதன் அலட்சியமாக பதில் குறி சாமுத்திரியனையும் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

எனவே மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில் வீட்டில் இருந்த தேங்காய் உரிக்கும் மிஷினை எடுத்து சத்யா நாதன் சாமுத்திரியனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் முகம் சிதைந்து கீழே விழுந்த சாமுத்திரியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த அரூர் டி எஸ் பி சதீஷ்குமார், இன்ஸ்பெக்டர் அம்சவள்ளி ஆகியோர் அவரது உடலை கைப்பற்றி தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் சத்யநாதனை கைது செய்து சாமுத்திரியன் கொலை செய்யப்பட்டதற்கு சொத்து தகராறு தான் காரணமா? இல்லை வேறு ஏதாவது காரணத்திற்காக கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து தொடர்ந்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சொத்து தகராறில் சொந்த அண்ணனை தம்பியே சரமாரியாக அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.